ரயில்வேயில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !இதோ விண்ணப்பிக்க கடைசி தேதி ….

Default Image

ரயில்வ தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ரயில்வே உதவி ஓட்டுநர், தொழில்நுட்ப பணியாள்கள் என பல்வேறு பிரிவுகளில் 26,000 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, பத்தாம் வகுப்பு, ஐடி, பொறியியல், டிப்ளமோ உள்ளிட்ட கல்வித் தகுதி உடைய 18 வயது முதல் 30 வயதுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மார்ச் 5-ம் தேதி விண்ணப்பிப்பதற்கு கடைசி நாளாகும்.

இடஒதுக்கீடு பிரிவில் வயது வரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. பிற்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் 3 ஆண்டுகளும், தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் 5 ஆண்டுகளும் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

கணிணி சார்ந்த இருநிலையில் தேர்வுகளும், சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட அடுதடுத்த கட்ட தேர்வு முறைப்படி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு அறிவிப்பும் ரயில்வே தேர்வு வாரியத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு :  www.indianrailways.gov.in

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்