SBI-யில் வேலை வாய்ப்பு…மறந்துவிடாமல் விண்ணப்பீங்க..இதுதான் கடைசி தேதி.!!
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா SBI ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை என அறிவித்துள்ளது. மொத்தம் உள்ள 217 பணியிடங்களில், உதவி மேலாளர் உட்பட பல்வேறு மேலாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க உங்களுக்கு வாய்ப்பு உள்ளது.
மேலாளர், துணை மேலாளர் மற்றும் பலர். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிகளுக்கு மே 19 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வை ஜூன் மாதம் வங்கி நடத்தும் என கூறப்படுகிறது.
கல்வி தகுதி
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் BE/BTech (கணினி அறிவியல்/ கணினி அறிவியல் & பொறியியல்/ தகவல் தொழில்நுட்பம்/ மென்பொருள் பொறியியல்/ மின்னணுவியல் & கம்யூனிகேஷன்ஸ் இன்ஜினியரிங் அல்லது அதற்கு இணையான பட்டப்படிப்பு அல்லது சம்மந்தப்பட்ட துறையில் எம்சிஏ அல்லது எம்டெக்/எம்எஸ்சி
கல்வித் தகுதி முடித்திருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது..?
மே 19 அன்று அல்லது அதற்கு முன், இந்த பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தங்களின் செல்லுபடியாகும் மின்னஞ்சல் ஐடி / மொபைல் ஃபோன் எண்ணை கொண்டு விண்ணப்பம் செய்துகொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு இந்த PDFயை SBI JOB PDF க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.