Co-operative Bank Ltd [File Image]
Co-operative Bank: உத்தரகாண்ட் கூட்டுறவு நிறுவன சேவைகள் வாரியம், கிளார்க்-கம்-கேஷியர், ஜூனியர் கிளை மேலாளர், மூத்த கிளை மேலாளர், உதவி மேலாளர் மற்றும் மேலாளர் என மொத்தம் 233 பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கூட்டுறவுத் துறையின் அதிகாரப்பூர்வ www.cooperative.uk.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை படித்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் விண்ணப்பம் தொடர்பான முக்கியமான தேதிகள் பின்வருமாறு, கடந்த 14-ம் தேதி அறிவிக்கப்பட்ட இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி 01-04-2024 அன்று தொடங்குகிறது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது. விண்ணப்பத்தை திருத்தங்கள் செய்வதற்கான தேதி 07-05-2024 அன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் ஒரு டிகிரி, டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
குறைந்தபட்ச வயது 21ஆகவும் அதிகபட்ச வயது 42 ஆகவும் இருக்க வேண்டும்.
காலியிட விவரங்களில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன், மேலே கொடுக்கப்பட்டுள்ள முழு அறிவிப்பையும் படித்து கொண்டு விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்த பின்பு, தேர்வு அட்டவணை, கால் டிக்கெட் வெளியீடு, இதர திருத்தங்கள் போன்ற தேர்வு செயல்முறைகள் குறித்த கூடுதல் தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் கூட்டுறவுத் துறையின் www.cooperative.uk.gov.in என்ற இணையதளத்தை அவ்வப்போது பார்வையிடுவது அவசியம்.
விண்ணப்பதாரர்கள் தங்களது கால் டிக்கெட் கூட்டுறவுத் துறையின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தபால் மூலம் கூட்டுறவுத் துறையால் அனுமதி அட்டைகள் வழங்கப்படாது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…