டிகிரி முடித்திருந்தால் மத்திய அரசுக்கு சொந்தமான மின்சார வாரியத்தில் வேலை.!
BSPHCL: பீகார் ஸ்டேட் பவர் ஹோல்டிங் கம்பெனி லிமிடெட் (BSPHCL) மூலம் டெக்னீசியன் கிரேடு-III, ஜூனியர் அக்கவுண்ட்ஸ் கிளர்க், கரஸ்பாண்டன்ஸ் கிளர்க், ஸ்டோர் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பணிகளுக்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
ஸ்டேட் பவர் ஹோல்டிங் கம்பெனி லிமிடெட் ஆனது பீகார் மாநிலத்திற்குள் செயல்படும் அரசுக்கு சொந்தமான மின்சார ஒழுங்குமுறை வாரியமாகும்.
தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், அனைத்து தகுதி நிபந்தனைகளையும் படித்துவிட்டு BSPHCL-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான Power Holding Company என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி வருகின்ற 1ம் தேதி முதல் தொடங்குகிறது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மற்றும் கட்டணம் செலுத்தும் கால அவகாசம் 30-04-2024 அன்றுடன் நிறைவடைகிறது.
மொத்தம் 2610 காலியிடங்கள் உள்ளன, விண்ணப்பதாரர்கள் விவரங்களை பின்வருமாறு பார்க்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்
UR, EBC, BC விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1500 எனவும் பீகாரில் வசிக்கும் SC, ST, திவ்யாங் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.375 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கட்டண முறை
ஆன்லைன் பேமண்ட்
வயது
அனைத்து பிரிவினருக்கும் குறைந்தபட்ச வயது 21 ஆகவும், அதிகபட்ச வயது 37 ஆகவும் இருக்க வேண்டும். SC, ST விண்ணப்பதாரர்களுக்கான அதிகபட்ச வயது 42 ஆகவும் இருக்க வேண்டும்.
தகுதி
விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஓரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
பணியின் விவரங்கள்
- டெக்னீசியன் கிரேடு-II
- கடித எழுத்தர்
- ஜூனியர் அக்கவுண்ட்ஸ் கிளர்க்
- கரஸ்பாண்டன்ஸ் கிளர்க்
சம்பளம்
ரூ.9,200 முதல் ரூ.15,500 வரை வழங்கப்படும்.
குறிப்பு:
விண்ணப்பதாரரின் அனைத்து விவரங்களும் இறுதியாக சமர்ப்பித்த பிறகு எந்த மாற்றமும் செய்ய அனுமதிக்கப்படாது.
எனவே விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை மிகுந்த கவனத்துடன் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பத்தில் தவறான விவரங்களை வழங்குதற்கு BSPHCL பொறுப்பேற்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.