இந்தியன் ரயில்வேயில் JE வேலை ..! விண்ணப்பிக்க இன்ஜினியரிங் டிகிரி போதும் ..!

Indian Railways Job

இந்தியன் ரயில்வே : இந்திய ரயில்வே வாரியத்தின் அறிவிப்பின் படி ஜெஈ (JE), டிஎம்எஸ் (DMS) மற்றும் சிஎம்ஏ (CMA) போன்ற காலியாக உள்ள பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த காலியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இந்த வேலை தொடர்பான அனைத்து விவரங்களையும் கீழே கொடுத்துள்ளோம் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

முக்கிய தேதிகள் :

விண்ணப்பிக்க தொடங்கும் தேதி 30-07-2024
விண்ணப்பிக்க கடைசி தேதி 29-08-2024

காலியிட விவரங்கள் :

இரசாயன மேற்பார்வையாளர் (Chemical Supervisor) / ஆராய்ச்சி மற்றும் உலோகவியல் 17
ஜூனியர் இன்ஜினியர் (JE) / டிப்போ மெட்டீரியல் சூப்பிரண்டு / கெமிக்கல் & மெட்டலர்ஜிக்கல் உதவியாளர் 7934
மொத்தம் 7951

கல்வி தகுதி :

  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தபட்ட ஏதேனும் ஒரு இன்ஜினியரிங் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம் :

  • இந்த பணிகளுக்காக பணியமர்த்த படும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.35,400/- முதல் ரூ.44,900/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு :

வயது வரம்பு
குறைந்தபட்ச வயது 18
அதிகபட்ச வயது 36
  • SC / ST / OBC / Ex-Servicemen / PwBD / பெண், விதவை, விவாகரத்து அல்லது நீதித்துறையில் பிரிந்தவர் போன்ற பிரிவினருக்கான வயது தளர்வு பொருந்தும்.

பணியமர்த்தப்படும் இடம் :

  • இந்த வேலை தொடர்பாக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படலாம்.

தேர்வு செய்யும் முறை :

  • முதல் நிலை கணினி அடிப்படையிலான தேர்வு (CBT-I)
  • 2வது நிலை கணினி அடிப்படையிலான தேர்வு (CBT-II)
  • ஆவண சரிபார்ப்பு (DV) – Document Verificiation
  • மருத்துவப் பரிசோதனை (ME) போன்ற தேர்வு முறைகளின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் :

அனைத்து விண்ணப்பதரர்களுக்கும் ரூ.500/-
SC/ST/பெண்கள்/முன்னாள் சேவையாளர் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250/-

விண்ணப்பிக்கும் முறை :

  • இந்தியன் ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்ட இந்த பணிக்கான தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.rrbchennai.gov.in/ -ஐ கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
  • அந்த அதிகாரப்பூர்வ இணையத்தில் சென்று ஆன்லைனில் இந்த வேலைக்காக விண்ணப்பித்து கொள்ளலாம்.
  • மேலும் இந்த பணிக்கான தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ PDF-ஐ பதிவிறக்கம் செய்வதற்கு, இந்த PDF-ஐ க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • குறிப்பு :- விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் போது உபயோகத்தில் உள்ள மின்னஞ்சல் முகவரி (E-Mail) மற்றும் மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்