இஸ்ரோவில் அப்ரண்டிஸ் வேலை.! பயற்சி பெற்றுக்கொண்டே மாதச் சம்பளம்…

ஹைதராபாத்தில் உள்ள இஸ்ரோவின் நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர், 70 அப்ரண்டிஸ் பணிக்கான காலிபணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிப்பதற்கு முன், இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டரால் (NRSC) வெளியிடப்பட்ட NRSC என்ற அதிகாரப்பூர்வ இணையதளயத்திற்கு சென்று படிக்கவும்.
கல்வி தகுதி:
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் பிஇ, பிடெக், டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சிக்கான வயது:
குறைந்தபட்ச வயது 15 முதல் அதிகபட்ச வயது வரம்பு 24 வரை கொடுக்கப்பட்டுள்ளது.
பதவிகள்:
கிராஜுவேட் அப்ரெண்டிஸ், டெக்னீசியன் அப்ரண்டிஸ், டிப்ளமோ அப்ரெண்டிஸ்.
சம்பளம்:
கிராஜுவேட் பயிற்சியாளர்களுக்கு 17 காலி பணியிடங்கள் உள்ளது. அவர்களுக்கு மாதம் ரூ.9000, டெக்னீசியன் பயிற்சியாளர்களுக்கு 30 காலி பணியிடங்கள் உள்ளது. அவர்களுக்கு மாதம் ரூ.8000, டிப்ளமோ பயிற்சியில் 23 காலி பணியிடங்கள் உள்ளது அவர்களுக்கு மாதம் ரூ. 8000 சம்பளம் வழங்கபடுகிறது.
துறைகள்:
கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், கமர்ஷியல் மற்றும் கம்ப்யூட்டர் பிராக்டீஸ் ஆகியவை அடங்கும்.
கட்டணம் செலுத்தவும் முறை:
விண்ணப்பப் படிவத்தில் உள்ள விவரங்களை விண்ணப்பித்த பிறகு, விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்துடன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள பேமெண்ட் கேட்வே மூலம் பயிற்சி விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். நெட் பேங்கிங் அல்லது டெபிட் கிரெடிட் கார்டு மூலம் ஆன்லைனில் கட்டணத்தை செலுத்த மே 13 முதல் ஜூன் 2 வரை நேரம் கொடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு:
ஆன்லைன் பதிவு மற்றும் சமர்ப்பிப்பு ஜூன் 2ம் தேதியுடன் முடிவடையும். பயிற்சி விண்ணப்பப் படிவத்தை குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்திற்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்கத் தவறிய விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படாது, மேலும் இது தொடர்பான கடிதப் பரிமாற்றம் நடத்தப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
எங்க கிட்ட ரஷீத் இருக்காரு..கவலை கொஞ்சம் கூட இல்லை..ஆப்கானிஸ்தான் வீரர் அதிரடி பேச்சு!
February 21, 2025
ஜஸ்ட் மிஸ்!! நூலிழையில் உயிர் தப்பிய கங்குலி.! நடந்தது என்ன?
February 21, 2025
சற்று ஆறுதல் அளிக்கும் தங்கம் விலை… இன்று சவரனுக்கு ரூ.360 குறைவு!
February 21, 2025