B.E/ME/M.Tech பொறியியல் பட்டதாரிகளுக்கு மத்திய அணுசக்தி துறையான IGCARஇல் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மத்திய அணுசக்தி துறையான இந்திராகாந்தி அணுசக்தி ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை , முதுகலை பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பதவிகள்– இயற்பியல், வேதியல், அணுசக்தி துறை, கதிவீச்சு துறை பொறியாளர்கள்.
காலியிடங்கள் –100 காலிப்பணியிடங்கள்.
கல்வித்தகுதி :
குறைந்த பட்சம் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அந்தந்த பல்வேறு துறைகளுக்கான பதவியிடங்கள் குறித்து பட்டம் பேற்றிருக்க வேண்டும்.
குறைந்த பட்சம் 55 சதவீத தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். (குறிப்பிட்ட பிரிவினருக்கு 5 சதவீத விலக்கு உண்டு)
சம்பளம் விவரம் (மாத அடிப்படையில்) –21,000 முதல் 40,000 ரூபாய் வரை.
வயது வரம்பு –
28வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
OBC பிரிவினருக்கு 3 வயது தளர்வு.
SC/ST பிரிவினருக்கு 5 வயது தளவு.
மாற்று திறனாளிகளுக்கு 10 வயது தளர்வு. (40 சதவீதத்திற்கு மேல்)
தேர்வு செய்யப்படும் முறை :
கணினி அடிப்படையிலான ஆன்லைன் தேர்வு.
நேர்முக தேர்வு.
சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பக் கட்டணம் –விதிமுறைகளுக்கு உட்பட்டது.
விண்ணப்பம் தொடங்கிய தேதி– 29 மே 2023.
விண்ணப்பிக்க கடைசி தேதி– 16 ஜூன் 2023. (ஆன்லைன்). 21 ஜூன் 2023 (நேரடி விண்ணப்பம்)
விண்ணப்பிக்கும் முறை :
இந்திராகாந்தி அணுசக்தி ஆராய்ச்சி துறை அதிகாரபூர்வ தலமானwww.igcrect.injoinindiannavy.gov.in-க்கு சென்று இமெயில் முகவரி கொடுத்து OTP உள்ளீடு செய்ய வேண்டும்.
அதனை தொடர்ந்து, வரும் அப்ளிகேஷனில், பெயர், முகவரி, படிப்பு, உள்ளிட்டவையை உலீடு செய்ய செய்ய வேண்டும்.
அதில் பெயர் , முகவரி உள்ளிட்ட அத்தியாவச தகவல்களை குறிப்பிட்டு அதற்கான உறுதியான ஆதாரங்களையும் பதிவேற்ற வேண்டும்.
இறுதியாக தேவை இருப்பின் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். இல்லையெனில், இறுதி நகலை பதிவிறக்கம் செய்து வைத்து கொள்ள வேண்டும்.
பின்னர் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் பயனர்களின் இணையதள முகவரி மூலம் அழைக்கப்படுவர்.
