டிகிரி முடித்திருந்தால் காவல்துறை, மத்திய ஆயுதப் படை பிரிவில் வேலை… உடனே விண்ணப்பியுங்கள்!
SSC: டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதப் படைப் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதப் படைப் பிரிவில் மொத்தம் 4,187 பணியிடங்கள் நிரப்பட உள்ளது. இதனால், தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
காலிபணியிட விவரங்கள்:
மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தலைநகர் டெல்லி காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் மத்திய ஆயுதப் படைகளில் பிஎஸ்எஃப், சிஐஎஸ்எஃப், சிஆர்பிஎஃப், ஐடிபிபி, எஸ்எஸ்பி (BSF, CISF, CRPF, ITBP, SSB) ஆகிய பதவிகளில் 4,187 இடங்கள் நிரப்படவுள்ளது.
கல்வி தகுதி & வயது வரம்பு:
கல்வித் தகுதி – யுஜிசி அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து அறிவியல், வணிகம் அல்லது கலைப் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Read More – டிகிரி முடித்திருந்தால் சென்ட்ரல் பேங்க் வேலை.! அதுவும் தமிழ்நாட்டில்…உடனே விண்ணப்பிக்கவும்.!
வயது வரம்பு – 20 மற்றும் 25 வயதிற்கு மேல் இருக்கக்கூடாது, மேலும் அரசு விதியின்படி OBCக்கு 3 ஆண்டுகள் & SC/ST க்கு 5 ஆண்டுகள் அதிகபட்ச வயது தளர்வு இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை:
டெல்லி காவல்துறை மற்றும் சிஏபிஎஃப்களில் எஸ்ஐ பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பங்களை பெற்று சமர்ப்பிக்கவேண்டும். அதன்படி, https://ssc.nic.in என்ற பணியாளர் தேர்வு ஆணையத்தின் இணையதளத்தில் விண்ணப்பத்தை பெற்று கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
Read More – மத்திய அரசு வேலை! 2049 காலிப்பணியிடங்கள்… 10, 12ம் வகுப்பு படித்திருந்தாலே போதும்..
பொது மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ரூ.100 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், பெண்கள், SC/ST, மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பதாரர்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட், யுபிஐ மூலம் கட்டணத்தை செலுத்தலாம்.
முக்கிய நாட்கள்:
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28-03-2024.
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 29-03-2024.
தேர்வு முறை:
பேப்பர் 1, பேப்பர் 2 என இரு கணினி முறையில் 20 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். முதல் இந்தி மற்றும் ஆங்கிலம், இரண்டாம் தாளில் ஆங்கிலம் முறையில் கேள்விகள் இடம்பெறும். பின்னர் அடுத்தகட்ட தேர்வுமுறை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards இதனை க்ளிக் செய்யவும்.