ஐடிபிஐ வங்கியில் 1036 வேலை வாய்ப்புகள்…. டிகிரி முடித்தால் போதும்.. எப்படி.? எவ்வாறு.?

IDBI Bank

ஐடிபிஐ வங்கியானது ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு நிர்வாக பணிகளுக்கு ஆட்செர்ப்புக்கென காலிப்பணியிட விவரங்களை அறிவித்துள்ளது. 

அரசாங்க கட்டுப்பாட்டில் இருக்கும் வங்கிகளில் ஒன்றான ஐடிபிஐ வங்கி (IDBI Bank) புதிய வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. இந்த எக்ஸிகியூட்டிவ் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு நடைபெறும். இந்த பதவிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்த காலம் :

இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பானது, நேற்று (24 மே 2023) வெளியிடபட்டது. விண்ணப்பதாரர்கள் ஐடிபிஐயின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பஙக்ளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 7, 2023 ஆகும். இந்த பதவி ஒப்பந்தம் அடிப்படையில் என்பதால், முதலில் 1 வருட காலத்திற்கு ஒப்பந்தம் இருக்கும். அதன் பிறகு வங்கி நிர்வாகம் நீட்டிக்க நினைக்கும் பட்சத்தில், மேலும் 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் நீட்டிக்கப்படும். அதன் பின்னர் ஓவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒப்பந்த காலம் நீட்டிக்கப்படும்.

கல்வி தகுதி :

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்து இருக்க வேண்டும்.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள், 20 முதல் 25 வயது வரை பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும்.

வயது தளர்வு : 

  • SC/ST பிரிவினர்களுக்கு – 5 வயது தளர்வு.
  • OBC பிரிவினர்களுக்கு – 3 வயது தளர்வு.
  • மாற்றுத்திறனாளிகளுக்கு – 10 வயது தளர்வு.
  • முன்னாள் ராணுவத்தினர்களுக்கு – 5 வயது தளர்வு.

விண்ணப்பக் கட்டணம் :

  • SC/ST/PWD பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு ரூ.200 கட்டணம் .
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1000 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

காலிப்பணியிட விவரம் (வகுப்புவாரியாக ):

  • SC பிரிவுக்கு 160 இடங்கள்.
  • ST பிரிவுக்கு 67 இடங்கள்.
  • OBC பிரிவுக்கு 255 இடங்கள்.
  •  பொருளாதாரத்தில் பின்தங்கிய EWS பிரிவினருக்கு 103 இடங்கள்.
  • எந்த பிரிவையும் சேராதோர்களுக்கு 451 இடங்கள்

என மொத்தமாக 1036 காலிப்பணியிடங்களுக்கு வகுப்பு வாரியாக காலிப்பணியிட விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தேர்வு முறை :

ஆன்லைன் தேர்வு, அதன் பின்னர் ஆவண சரிபார்ப்பு முடித்து, இறுதியாக, மருத்துவ பரிசோதனை முடித்து வேலைக்கு சேர்க்கப்படுவர்.

  • திறனறிவு , தரவுகள் பகுப்பாய்வு (Logical Reasoning, Data Analysis & Interpretation) – 60 கேள்விகள் 60 மதிப்பெண்கள்.
  • ஆங்கில மொழி – 40 கேள்விகள் 40 மதிப்பெண்கள்.
  • திறனறிவு தேர்வு – 40 கேள்விகள் 40 மதிப்பெண்கள்.
  • பொது/பொருளாதாரம்/வங்கி குறித்த கேள்விகள்/ கணினி/ஐடி – 60 கேள்விகள் 60 மதிப்பெண்கள்

என மொத்தமாக 200 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். அதனை எழுதி முடிக்க 2 மணிநேரம் வழங்கப்படும்.

சம்பள விவரம் : 

  • முதல் வருடம் ரூ. மாதம் 29,000/-
  • இரண்டாம் வருடம் ரூ. மாதம் 31,000/-
  • மூன்றாம் வருடம் ரூ. மாதம் 34,000/-.

ஐடிபிஐ எக்சிகியூட்டிவ் பணிகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை படிநிலையாக பார்க்கலாம்….

  • ஐடிபிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான idbibank.in ஐ கிளிக் செய்து, அதில் குறிப்பிட்ட பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய லிங்கை கிளிக் செய்யவும்.
  • ஒப்பந்தம்-2023 இல் எக்ஸ்கியூடிவ் பணிக்கான லிங்கை கிளிக் செய்யவும்.
  • அதன் மூலம் தோன்றும் புதிய பக்கத்தில், தொடர ஆன்லைனில் விண்ணப்பிக்க தேவையான லிங்கை கிளிக் செய்யவும்.
  • அதில் தோன்றும் பக்கத்தில், தனிப்பட்ட விவரங்கள் மற்றும் கல்வி விவரங்களை விண்ணப்பப் படிவத்தில் நிரப்பவும்.
  • தேர்வு எழுதுவோரின் புகைப்படம், கையொப்பம், கட்டைவிரல் பதிவு, கையால் எழுதப்பட்ட அறிவிப்பு ஆகியவை குறிப்பிட்ட அறிவிப்பின் படி இருந்தால் அதனை பதிவேற்றவும்.
  • விண்ணப்ப படிவத்தை முழுதாக நிரப்பிய பின்னர், நிர்ணயிக்கப்பட்ட விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
  • உள்ளீடு செய்த அனைத்து தகவல்களையும் சரிபார்த்து, அனைத்தும் சரியாக இருந்தால், விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். பின்னர், விண்ணப்பத்தின் நகலை பதிவிறக்கவும்.

முக்கிய தேதிகள் : 

  • அறிவிப்பு வெளியான தேதி  – 24 மே 2023.
  • விண்ணப்பிக்க தொடக்க நாள்  – 24 மே 2023.
  • விண்ணப்பிக்க கடைசி தேதி – 7 ஜூன் 2023.
  • ஆன்லைன் தேர்வு நாள் – 2 ஜூலை 2023.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
BYD Yangwang U9
Ajithkumar
Pawan Kalyan - Tirupati Temple
Vikravandi - School
GST Tax devolution State wise
Rahul kl Eng Series