மத்திய மருத்துவ துறையின் கீழ் செயல்படும் ICMR-NIN துறையில் லேப் டெக்னீசியன் பணிகள்.. விவரங்கள் இதோ…
மத்திய மருத்துவ துறையின் கீழ் செயல்படும் ICMR-NIN துறையில் லேப் டெக்னீசியன் பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் கீழ் செயல்படும் செயல்படும் ICMR – NIN துறையில் லேப் டெக்னீசியன், தொழில்நுட்ப டெக்னீசியன் பணிகளுக்கு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிப்பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 20-ஜூலை-2023 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. கடைசி தேதியாக ஆகஸ்ட் 10ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரம் இதோ..
பணியின் விவரங்கள் மற்றும் காலியிடங்கள் :
- தொழில்நுட்ப உதவியாளர் – 45 காலிப்பணியிடங்கள்.
- டெக்னீஷியன் – 33 காலிப்பணியிடங்கள்.
- ஆய்வக உதவியாளர் – 38 காலிப்பணியிடங்கள்.
கல்வித்தகுதி :
- சம்பந்தப்பட்ட பிரிவுகளில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்தபட்சம் லேப் டெக்னீசியன் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் விவரம் – குறிப்பிடப்படவில்லை
வயது வரம்பு :
- குறைந்தபட்சம் 18 வயது நிரம்பி இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை :
- நேர்முகத்தேர்வு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பம் தொடங்கிய தேதி – 20 ஜூலை 2023.
விண்ணப்பிக்க கடைசி தேதி – 08 ஆகஸ்ட் 2023.
விண்ணபக்கட்டணம் – குறிப்பிடப்படவில்லை
விண்ணப்பிக்கும் முறை :
- ICMR-இன் அதிகாரபூர்வ தளமான www.nin.res.in/க்கு செல்ல வேண்டும்.
- வரும் 20ஆம் தேதியில் தான் இதற்கான லிங்க்குகள் அறிவிக்கப்படும்.
- 20ஆம் தேதிக்கு பின்னர் அந்த பக்கத்தில் எந்த பணிக்கு அதற்கான லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
- பின்னர், அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும் இறுதியில் தேவையிருப்பின் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
- அதில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு பின்னர் பணியமர்த்தப்படுவர்.