நர்சிங் படிச்சிருக்கீங்களா ? திருச்சியில் ரூ.18,000 சம்பளத்துடன் சூப்பர் வேலை!!

job trichy

திருச்சி : மாவட்டத்தில் செயல்பட்டுவரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும்  போதை மீட்டு மையத்தில் ஆலோசகர்/உளவியலாளர், மனநல சமூக சேவகர், ஸ்டாஃப் நர்ஸ் உள்ளிட்ட பதவிகளை  நிரப்ப வேலைவாப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  கீழ்கண்ட பதவிகளுக்கு முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 31.08.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள் விவரம் எண்ணிக்கை 

  • ஆலோசகர்/உளவியலாளர் –  1
  • மனநல சமூக சேவகர் – 1
  • ஸ்டாஃப் நர்ஸ் – 1

 கல்வித்தகுதி

  • ஆலோசகர்/உளவியலாளர் பணிக்கு : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் இருந்து மருத்துவ உளவியலில் திட்டம். (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேச, படிக்க மற்றும் எழுதும் திறன்)
  • மனநல சமூக சேவகர் பணிக்கு : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களிலிருந்து சமூகப் பணியின் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேச, படிக்க மற்றும் எழுதும் திறன் கட்டாயம்)
  • ஸ்டாஃப் நர்ஸ் பணிக்கு : இந்திய நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட பொது நர்சிங்கில் டிப்ளமோ அல்லது நர்சிங்கில் பட்டம் பெற்றிருக்கவேண்டும். (பேச, படிக்க மற்றும் எழுதும் திறன் தமிழ் மற்றும் ஆங்கிலம்)

சம்பள விவரங்கள்

  • ஆலோசகர்/உளவியலாளர்  பணிக்கு மாதம் RS.23,000 சம்பளம் வழங்கப்படும்.
  • மனநல சமூக சேவகர் பணிக்கு RS.23,800 சம்பளம் வழங்கப்படும்.
  • ஸ்டாஃப் நர்ஸ் பணிக்கு RS.18,000 சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு

  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க வயது 40-க்குள் இருக்க வேண்டும், வயது வரம்பு தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

தேர்வு செய்யப்படும் முறை

  • விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்

  • கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை

  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை https://tiruchirappalli.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..
  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவேண்டும்.

முதல்வர், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை / உறுப்பினர், மாவட்ட நலவாழ்வு சங்கம், திருச்சிராப்பள்ளி 620 001

கடைசி தேதி

  • 31.08.2024

முக்கிய இணைப்புகள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு -க்ளிக் 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news update
RN Ravi Vice Chancellor Meeting
A gold ATM in Shanghai
ambati rayudu About RCB
Udhayanidhi Stalin tn assembly
thangam thennarasu tn assembly
CM MKStalin