சமூகப்பணியில் மாஸ்டர் டிகிரி முடிச்சுடீங்களா..? 22,000 சம்பளத்தில் மூத்த ஆலோசகர் வேலை ..!
இராணிப்பேட்டை : மாவட்ட சமுக நலத்துறையின் கீழ், வாலாஜா அரசு மருத்துவமனையில் இயங்கவிருக்கும் ஒருங்கிணைந்த சேவை மையம் (ONE STOP CENTRE) என்ற திட்டத்திற்கு ஒரு மூத்த ஆலோசகர் (Senior Counselor) மற்றும் 2 வழக்கு பணியாளர் (Case Worker) பணிக்கு ஆட்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு எவ்வளவு சம்பளம் எப்படி விண்ணப்பம் செய்யவேண்டும் என்ற விவரம் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.
காலியிட விவரங்கள்
பதவியின் பெயர் | காலியிட விவரங்கள் |
மூத்த ஆலோசகர் | 1 |
வழக்கு பணியாளர் | 2 |
கல்வி தகுதி
- விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் B.Sc , M.Sc முடித்திருக்க வேண்டும்.
மூத்த ஆலோசகர் பணிக்கு : இரண்டு வருட அனுபவம் மற்றும் வளர்ச்சி மேலாண்மை, ஆலோசனை உளவியல் அல்லது சமூகப் பணிகளில் முதுகலைப் பட்டம்
வழக்கு தொழிலாளி பணிக்கு : வளர்ச்சி மேலாண்மை, ஆலோசனை உளவியல் அல்லது சமூகப் பணி ஆகியவற்றில் இளங்கலைப் பட்டத்துடன் இணைந்த ஒரு வருட அனுபவம் வேண்டும்.
சம்பள விவரம்
மூத்த ஆலோசகர் | ரூ.22,000 |
வழக்கு பணியாளர் | ரூ.18,000 |
முக்கிய நாட்கள்
விண்ணப்பம் தொடங்கிய தேதி | 09/07/2024 |
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி | 23/07/2024 |
விண்ணப்பம் செய்வது எப்படி?
- மூத்த ஆலோசகர் (Senior Counselor) மற்றும் 2 வழக்கு பணியாளர் பணிக்கு வேலையில் சேர உங்களுக்கு விருப்பம் இருந்தது என்றால் நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ranipet.nic.in/ இணையதளத்திற்கு சென்று வேலைவாய்ப்பு பிரிவை க்ளிக் செய்யவேண்டும்.
- பின் அதில் இந்த வேலை சம்பந்தமாக கொடுக்கப்பட்டு இருக்கும் அதிகாரப்பூர்வ விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவேண்டும்.
- பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை சரியான ஆவணங்களை வைத்து விண்ணப்பம் செய்யவேண்டும்.
- பிறகு அந்த படிவத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலம் அனுப்பவேண்டும்.
அனுப்பவேண்டிய முகவரி
மாவட்ட சமூகநல அலுவலகம்,
4வது தளம், “C” பிளாக்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
இராணிப்பேட்டை மாவட்டம்
முக்கிய விவரம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | க்ளிக் PDF |
விண்ணப்ப படிவம் | க்ளிக் |