டிகிரி படிச்ருக்கீங்களா? 6 நாள் தாங்க இருக்கு.. பேங்க் ஆஃப் பரோடாவில் அசத்தல் வேலை!
Bank of Baroda ஆட்சேர்ப்பு 2024: பேங்க் ஆஃப் பரோடா (BOB) அந்நிய செலாவணி கையகப்படுத்தல் மற்றும் உறவு மேலாளர், கடன் ஆய்வாளர், உறவு மேலாளர் மற்றும் பிற காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்தியா முழுவதும் 168 காலியிடங்கள் உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வருகின்ற 12ம் தேதி தான் கடைசி தேதி, இன்னும் 6 நாட்களே உள்ளதால், காலியிடங்களில் விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், அனைத்து தகுதி நிபந்தனைகளையும் படித்துவிட்டு அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.bankofbaroda.in/ ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
காலியிட விவரங்கள் :
பதவியின் பெயர் | பணியிடங்கள் | தகுதி |
அந்நிய செலாவணி கையகப்படுத்தல் (மற்றும்) உறவு மேலாளர் |
11 | முதுகலை பட்டம் , டிப்ளமோ |
அந்நிய செலாவணி கையகப்படுத்தல் (மற்றும்) உறவு மேலாளர் |
04 | முதுகலை பட்டம் , டிப்ளமோ |
கடன் ஆய்வாளர் | 10 | பட்டம் (எந்தத் துறையிலும்) மற்றும் CA |
கடன் ஆய்வாளர் | 70 | CA, CMA, CS, CFA பட்டப்படிப்பு (எந்தத் துறையிலும்) மற்றும் முதுகலை பட்டம் |
உறவு மேலாளர் | 44 | முதுகலை பட்டம், டிப்ளமோ |
உறவு மேலாளர் | 22 | முதுகலை பட்டம், டிப்ளமோ |
மூத்த மேலாளர் வணிக நிதி | 04 | பட்டப்படிப்பு (எந்தவொரு துறையிலும்) மற்றும் பட்டய கணக்காளர் அல்லது முதுகலை பட்டம், டிப்ளமோ |
தலைமை மேலாளர் உள் கட்டுப்பாடுகள் | 03 |
பட்டப்படிப்பு (எந்தத் துறையிலும்) மற்றும் பட்டயக் கணக்காளர் தகுதி DISA/CISA சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.விண்ணப்பக் கட்டணம்
|
- G eneral, EWS, OBC-க்கு : ரூ. 600/-
- S C, ST, PWD, பெண்களுக்கு : ரூ. 100/-
- கட்டண முறை : ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கிய நாட்கள்
விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி | 12-06-2024 |
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி | 12-07-2024 |
தகுதி
விண்ணப்பதாரர்கள் ஏதேனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
அனைத்து பதவிகளுக்கும் குறைந்தபட்ச வயது வரம்பு 24 ஆகவும், அதிகபட்ச வயது வரம்பு 42ஆக இருக்க வேண்டும்.
சம்பளம்
சம்பளம் விபரம் குறித்து அறிக்கையில் குறிப்பிடவில்லை. மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள இந்த PDF ஐ க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
விண்ணப்பிக்கும் முறை
- மேற்கண்ட பணியில் வேலைக்கு சேர விருப்பம் இருந்தது என்றால் நீங்கள் https://www.bankofbaroda.in/ இணையதளத்திற்கு சென்று அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவேண்டும்.
- பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை முழுவதுமாக படித்துவிட்டு தேவையான ஆவணங்களை வைத்து விண்ணப்பம் செய்து கொள்ளுங்கள்.