இந்த டிகிரி முடிச்சுடீங்களா? அப்போ இந்த அரசாங்க டேட்டா என்ட்ரி வேலை உங்களுக்கு தான்..!

Published by
பால முருகன்

சிவகங்கை : மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் (NHM) கீழ் இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலத்தில் ஆடியோலஜிஸ்ட்/ஸ்பீச் தெரபிஸ்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், ரேடியோகிராபர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் உள்ளிட்ட பணிக்கு ஆட்கள் தேவை என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

காலியிடங்கள் விவரம் 

பதவியின் பெயர் எண்ணிக்கை
ஆடியோலஜிஸ்ட்/ஸ்பீச் தெரபிஸ்ட்

(Audiologist/Speech Therapist)

1

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்

(Data Entry Operator)

1

கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்

(Radiographer)

2

பல்நோக்கு மருத்துவமனை தொழிலாளி

(Multi Purpose Hospital Worker)

4

 

தேவையான கல்வித்தகுதி 

  • ஆடியோலஜிஸ்ட்/ஸ்பீச் தெரபிஸ்ட் : பணிக்கு ஆர்சிஐ அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் ஆடியோலஜி மற்றும் ஸ்பீச் லாங்குவேஜ் பேத்தாலஜி/பிஎஸ்சி (பேச்சு மற்றும் கேட்டல்) இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
  • டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் : பணிக்கு கணினி பயன்பாட்டில் ஓராண்டு முதுகலை டிப்ளமோவுடன் ஏதேனும் ஒரு பட்டம், ஆங்கிலம் மற்றும் தமிழில் எழுதுதல் தெரிந்திருக்கவேண்டும்.
  • கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்: பணிக்கு MRB விதிமுறைகளின்படி (B.Sc கதிரியக்கவியல்) படித்திருக்கவேண்டும்.
  • பல்நோக்கு மருத்துவமனை தொழிலாளி : பணிக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதும்.

சம்பள விவரம்? 

பதவியின் பெயர் சம்பளம்
ஆடியோலஜிஸ்ட்/ஸ்பீச் தெரபிஸ்ட் ரூ.23,000

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்

ரூ.13,500

கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்

ரூ.13,300

பல்நோக்கு மருத்துவமனை தொழிலாளி

ரூ.8,500

விண்ணப்பம் செய்வது எப்படி? 

  • மேற்கண்ட பணிகளில் வேலைக்கு சேர உங்களுக்கு ஆர்வம் இருந்தது என்றால் நீங்கள் சிவகங்கை மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://sivaganga.nic.in/ இணையதளத்திற்கு செல்லவேண்டும்.
  • அதன்பிறகு, அதில் வேலைவாய்ப்பு பிரிவை க்ளிக் செய்து இந்த வேலை தொடர்பான விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவேண்டும்.
  • அதன்பிறகு, அந்த விண்ணப்ப படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை சரியாக படித்துவிட்டு விண்ணப்பம் செய்துகொள்ளுங்கள்.
  • விண்ணப்பம் செய்துமுடித்த பிறகு நிரப்பிய அனைத்தும் சரியாக இருக்கிறதா? என்பதை ஒருமுறை கவனித்துவிட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவேண்டும்.

விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி 

இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகம், பழைய அரசு மருத்துவமனை வளாகம், நேரு பஜார், சிவகங்கை. தொலைபேசி எண் 04575-240403.

முக்கிய நாட்கள் 

விண்ணப்பத்திற்கான தொடக்க தேதி 01-07-2024
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 15-07-2024

குறிப்பு :

  • இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. எந்தவொரு காலத்திலும் பணிநிரந்தரம் செய்யப்படமாட்டாது.

மேலும், இந்த பணியை பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பான இந்த PDF-ஐ க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

Recent Posts

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

7 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

9 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

10 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

10 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

11 hours ago

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் – டெல்டா வெதர்மேன்.!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…

11 hours ago