பிஎச்.டி முடிச்சுடீங்களா ..? நூலகப் பயிற்சியாளராக வேண்டுமா ..? உடனே விண்ணப்பியுங்கள் ..!

bhd job

IMSC ஆட்சேர்ப்பு 2024 : பிரபல கணித அறிவியல் நிறுவனம் (IMSC) பல்வேறு பணிக்கு  08 காலியிடங்கள் இருப்பதாகவும், வேலையில் சேர விருப்பம் உள்ள விண்ணப்ப தாரர்கள் கீழ் வரும் விவரங்களை படித்துக்கொண்டு விண்ணப்பம் செய்துகொள்ளவும் அறிவித்துள்ளது.  தமிழ்நாட்டில் மத்திய அரசு வேலைகளில் ஆர்வமுள்ள நீங்கள் இந்த IMSC வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள் விவரம் 

பதவியின் பெயர் காலியிடங்களின் எண்ணிக்கை
ஆராய்ச்சி அசோசியேட் 02
திட்ட உதவியாளர் 05
நூலகப் பயிற்சியாளர் 01
மொத்தம் 08

 கல்வி தகுதி

  • விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்மந்தப்பட்ட துறையில் இளங்கலை/முதுகலை/ பிஎச்.டி பட்டம் பெற்றிருக்க வேண்டும் .

சம்பளம் 

ஆராய்ச்சி அசோசியேட் ரூ 53,000 முதல் ரூ 73,500 / வரை
திட்ட உதவியாளர் ரூ 21,000 முதல் ரூ 53,000 வரை
நூலகப் பயிற்சியாளர் ரூ. 20,000

வேலைக்கு தேர்வு செய்யப்படும் முறை 

  • தேர்வு பட்டியல், எழுத்துத் தேர்வு, தட்டச்சுத் தேர்வு மற்றும் ஆன்லைன் நேர்காணல் / நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.

வயது வரம்பு 

  • ப்ராஜெக்ட் அசிஸ்டென்ட் & ரிசர்ச் அசோசியேட் பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • லைப்ரரி டிரெய்னி பதவிக்கு குறைந்தபட்ச வயது 22 மற்றும் அதிகபட்ச வயது 27.
  • வயது தளர்வு மற்றும் கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

விண்ணப்பம் செய்யும் முறை 

  • இந்த வேலையில் சேர விருப்பம் உள்ள விண்ணப்ப தாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான @ imsc.res.in க்குச் செல்லவும்.
  • 28/06/2024 தேதியிட்ட “திட்டப் பதவிகளுக்கான விளம்பர எண்.22-R/IMSC/2024” என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
  • பிறகு அதில் உள்ள விண்ணப்ப படிவத்தை கிளிக் செய்து அதனை பதிவிறக்கம் செய்யுங்கள்.
  • அதில் கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்களை வைத்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்துகொள்ளுங்கள்.
  • கொடுக்கப்பட்ட தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரி மூலம் உங்கள் விருப்ப பதவிக்கு விண்ணப்பிக்கவும்.

மேலும், விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (PDF) பார்வையிடுங்கள். திட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பதவியானது, நியமனம் செய்யப்பட்ட நாளிலிருந்து 25.11.2024 வரை மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் முழுமையாக நிரப்பப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் விரைவாக விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்