10th படிச்சுருக்கீங்களா ? அப்போ புலனாய்வுத்துறையில் இந்த வேலை உங்களுக்கு தான் ?

Published by
அகில் R

IB Recruitment 2024 : உள்துறை அமைச்சகம் – உளவுத்துறை பணியகம் (IB) தற்போது மொத்தம் 660 காலியிட பணிகளுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உள்துறை மற்றும் உளவுத்துறை பணியகத்தில் பணிபுரிய தகுதி உள்ள 660 பேருக்கான தேடலில் இருந்து வருகின்றனர். டிப்ளமோ, டிகிரி முடித்து விட்டு உளவுத்துறையில் ஆர்வமுள்ள பட்டதாரிகள் இந்த வேலைக்கு ஏதுவாக இருப்பீர்கள். மத்திய அரசின் கீழ் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை தேவையான ஆவணங்களுடன் கொடுக்கப்பட்ட முகவரிக்கு சரியாகசமர்ப்பிக்க வேண்டும். தற்போது இந்த வேலைக்கான முழு விவரத்தையும் பார்க்கலாம்.

இந்த உள்துறை அமைச்சகம்/புலனாய்வுப் பணியகம் துறையில் ACIO, PA, JIO, SA போன்ற நிலைக்கு மொத்தம் 660 காலிப்பணியிடங்கள் உள்ளன.  IB ஆட்சேர்ப்பிர்க்கான தேர்வுப் பட்டியல், தேர்வுத் தேதி, பாடத்திட்டம், தேர்வு அனுமதி அட்டை, தேர்வு முறை போன்றவை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்படும் என அறிவித்துள்ளனர்.

கல்வி தகுதி

விண்ணப்பதாரர்கள் இந்த வேலைக்கு பத்தாம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது. மேலும், பொறியியல் பட்டதாரி /டிப்ளமோ பட்டதாரி போன்றவற்றை முடித்த விண்ணப்பதாரர்கள் இந்த IB ஆட்சேர்ப்புக்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள். மேலும் விவரங்களுக்கு mha.gov.in என்ற அதிகாரபூர்வ இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தேதி விவரங்கள் மற்றும் வயது வரம்பு

இந்த வேலைக்கான விண்ணப்பங்கள் கடந்த 13.03.2024 அன்று தொடங்கியுள்ளது, மேலும் 12.05.2024 இதற்கான கடைசி தேதியாக அறிவிக்கபட்டுள்ளது. இந்த வேலைக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 56 வயது மீகாமல் இருக்க வேண்டும்.

தேர்வு முறை

இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் போன்றவற்றின் அடிப்படையில் தேர்வு செய்வார்கள் என்று அறிவித்திருக்கின்றனர். மேலும், இந்த பணியிடங்களுக்காண கட்டண தகுதி எதுவும் குறிப்பிடவில்லை மேலும் தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையத்தை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்கள் Joint Deputy Director/G-3, Intelligence Bureau, Ministry of Home Affairs, 35 S P Marg, Bapu Dham, New Delhi-110021 இந்த முகவரிக்கு 12.05.2024 தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும், ஏதேனும் விவரங்கள் தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ mha.gov.in  இணையத்தில் சென்று Notification –> Vacancies உள் சென்று பார்த்தால் அதில் இந்த வேலைக்கான சரியான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Recent Posts

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

5 hours ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

6 hours ago

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

8 hours ago

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

9 hours ago

இது போர் தான்.., இந்தியா – பாகிஸ்தானின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்…

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…

10 hours ago

பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…

11 hours ago