விளையாட்டு வீரரா? இளங்கலை பட்டம் பெற்றவரா? எஸ்பிஐ வங்கியில் க்ளெர்க் வேலை வாய்ப்பு ..!
எஸ்பிஐ வேலைவாய்ப்பு 2024 : ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது வங்கியில் இந்த ஆண்டுக்கான கிளார்க் பதவிக்கான வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
எஸ்பிஐ வாங்கி அறிவித்துள்ள இந்த பணி விளையாட்டு வீரர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கான அடிப்படை தகுதி மற்றும் காலிப்பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது போன்ற தகவல்கள் பற்றிய முழு விவரம் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய தேதி :
விண்ணப்பிக்க தொடங்கிய தேதி | 24-07-2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 14-08-2024 |
காலியிட விவரங்கள் :
வங்கி அதிகாரி (SportsPerson) | 17 |
க்ளெர்க் (SportsPerson) | 51 |
மொத்தம் | 68 |
கல்வி மற்றும் அடிப்படை தகுதி :
- மேலே தெரிவிக்கப்பட்டுள்ள இந்த வங்கி பணிக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் கட்டாயமானது.
- இதனை தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளில் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி இருக்க வேண்டும்.
- விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேசிய நிகழ்வில் மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும், மாநில அளவிலான நிகழ்வில் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் அல்லது பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான நிகழ்வில் தனித்துவத்துடன் பல்கலைக்கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்திருக்க வேண்டும்.
- மேலும் விண்ணப்பதாரர்கள் ஒருங்கிணைந்த பல்கலைக்கழக குழுவின் புகழ்பெற்ற உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்.
சம்பள விவரம் :
- இந்த வேலைக்காக பணியமர்த்த படும் தகுதி உள்ளவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.24,050 முதல் ரூ.85,920 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு :
வங்கி அதிகாரி
|
குறைத்தபட்ச வயது வரம்பு | 21 ஆண்டுகள் |
அதிகபட்ச வயது வரம்பு | 30 ஆண்டுகள் | |
க்ளெர்க்
|
குறைத்தபட்ச வயது வரம்பு | 20 ஆண்டுகள் |
அதிகபட்ச வயது வரம்பு | 28 ஆண்டுகள் |
தேர்தெடுக்கும் முறை :
- இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களை மதிப்பீடு தேர்வு (Assesment Test) மூலம் தகுதியான வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
- பொது (General) / EWS / OBC பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – ரூ.750/- கட்டணம் செலுத்த வேண்டும்.
- SC / ST / PwBD பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை
குறிப்பு :
- கூடைப்பந்து, கிரிக்கெட் , கால்பந்து, ஹாக்கி, கைப்பந்து , கபடி, டேபிள் டென்னிஸ், பூப்பந்து போன்ற 8 துறைகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மட்டுமே மேற்கண்ட வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்கும் முறை :
- இந்த பணிக்காக விண்ணப்பிக்க முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமான https://recruitment.bank.sbi/crpd-sports-2024-25-7/apply பார்வையிட்டு இந்த வேலைக்கான விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
- அல்லது இந்த PDF-ஐ கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- இந்த வங்கி பணிக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
- விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டி இருந்தால், சரியாக செலுத்தி கொள்ள வேண்டும்.
- மேலே, தெரிவிக்கப்பட்ட அதிகாரி மற்றும் கிளார்க் பணிகளுக்கு மேலே கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் குறிப்பாக தகுதியுடைய விண்ணப்பதாரர்களை மதிப்பீடு தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் பணியமர்த்தப்படுவார்கள்.