பட்டதாரிகளே NIEPMDயில்108 காலியிடங்கள் …! முழு விவரம் இதோ ..!

NIEPMD ஆட்சேர்ப்பு : பன்முக ஊனமுற்ற நபர்களின் அதிகாரமளிப்பதற்கான தேசிய நிறுவனம் (NIEPMD) தற்போது வேலைவாய்ப்பு அறிவித்துள்ளனர். அதன்படி உதவி பேராசிரியர், விரிவுரையாளர், சிறப்புக் கல்வியாளர், மருத்துவ உதவியாளர் மற்றும் இதர காலியிடங்களை முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலியிட விவரங்கள் :
பதவியின் பெயர் | பணியிடங்கள் | தகுதி |
உதவி பேராசிரியர் (ஆலோசகர்) | 18 | முதுகலை பட்டம் (சம்பந்தப்பட்ட துறை) |
விரிவுரையாளர் (ஆலோசகர்) | 18 | எம்பிபிஎஸ், பிஜி பட்டம் (சம்பந்தப்பட்ட துறை) |
மறுவாழ்வு அலுவலர் (ஆலோசகர்) | 7 | பட்டம், முதுகலை பட்டம் (சம்பந்தப்பட்ட துறை) |
மருத்துவ உதவியாளர் (ஆலோசகர்) | 21 | D. பார்ம், டிப்ளமோ (GNM), B. Sc நர்சிங், பட்டம் (சம்பந்தப்பட்ட துறை) |
ஆசிரியர் (ஆலோசகர்) | 5 | பட்டம் (பிசியோதெரபி/தொழில் சிகிச்சை) |
புரோஸ்டெட்டிஸ்ட் & ஆர்த்தோட்டிஸ்ட் – டெமான்ஸ்ட்ரேட்டர் (ஆலோசகர்) | 6 | பட்டம் (புரோஸ்தெடிக்ஸ் & ஆர்தோடிக்ஸ்) |
சிறப்புக் கல்வியாளர் (ஆலோசகர்) | 22 | டிப்ளமோ, பட்டம், பிஜி டிப்ளமோ (சம்பந்தப்பட்ட துறை) |
தொழிற்கல்வி பயிற்றுவிப்பாளர் (ஆலோசகர்) | 8 |
தொழிற்பயிற்சியில் டிப்ளோமாவுடன் மேல்நிலைப் படிப்பு / D.Ed./B.Ed./ சிறப்புக் கல்வியில் முதுகலை டிப்ளமோ (MD/ID/ASD/DB/CP)
|
உதவியாளர் (ஆலோசகர்) | 1 | பட்டம் (BSW) |
பணிமனை மேற்பார்வையாளர் (ஆலோசகர்) | 2 |
10+2, ஐடிஐ (எலக்ட்ரிகல்/ மெக்கானிக்கல்), டிப்ளமோ/ பட்டம் (சம்பந்தப்பட்ட துறை
|
விண்ணப்பக் கட்டணம் :
- விண்ணப்பக் கட்டணம் ;- ரூ. 590/- (ஜிஎஸ்டி சேர்த்து)
- SC/ST/PWDகள் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கான கட்டணம் இல்லை.
- கட்டண முறை :- ஆன்லைன் முறையில்
முக்கிய நாட்கள் :
- ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மற்றும் கட்டணம் செலுத்துதல் அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 21 நாட்களுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
- அதன்படி பார்த்தால் வரும் ஜூலை-19, 2024 தேதிக்குள் விண்ணப்பத்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
- அனைத்து பதவிகளுக்கும் அதிகபட்ச வயது வரம்பு 56 ஆண்டுகள் ஆகி இருக்க வேண்டும்.
சம்பள விவரம் :
பதவியின் பெயர் | மாத சம்பளம் |
உதவி பேராசிரியர் (ஆலோசகர்) | ரூ.75,000 |
விரிவுரையாளர் (ஆலோசகர்) | ரூ.60,000 |
மறுவாழ்வு அலுவலர் (ஆலோசகர்) | ரூ.50,000 |
மருத்துவ உதவியாளர் (ஆலோசகர்) | ரூ.50,000 |
ஆசிரியர் (ஆலோசகர்) | ரூ.50,000 |
புரோஸ்டெட்டிஸ்ட் & ஆர்த்தோட்டிஸ்ட் – டெமான்ஸ்ட்ரேட்டர் (ஆலோசகர்) | ரூ.50,000 |
சிறப்புக் கல்வியாளர் (ஆலோசகர்) | ரூ.45,000 |
தொழிற்கல்வி பயிற்றுவிப்பாளர் (ஆலோசகர்) | ரூ.45,000 |
உதவியாளர் (ஆலோசகர்) | ரூ.45,000 |
பணிமனை மேற்பார்வையாளர் (ஆலோசகர்) | ரூ.35,000 |
மேற்கொண்டு தகவல் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அதிகாரபூர்வ இணையதளமான https://niepmd.tn.nic.in/ என்ற இணையதளத்த்தில் பெற்று கொள்ளலாம். இந்த பதவிகளுக்கான படிவத்தை நீங்கள் இதிலிருந்து PDF பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
தெலுங்கானாவில் பயங்கரம் : சுரங்கத்தில் சிக்கிய 8 தொழிலார்கள்.! 48 மணிநேரமாக தொடரும் மீட்புப்பணிகள்….
February 24, 2025
வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
February 24, 2025