B.Sc யில் பட்டம் முடித்தவரா? ரூ.25,000-யில் வனத்துறையில் அரசு வேலை .!

வனத்துறை ஆட்சேர்ப்பு 2024 : கோயம்புத்தூர் மாவட்டத்தில் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசு வனத்துறை சார்பாக காலிப்பணியிடங்களை தற்போது

TN Forest Departement Recuirement 2024

வனத்துறை ஆட்சேர்ப்பு 2024 :கோயம்புத்தூர் மாவட்டத்தில் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசு வனத்துறை சார்பாக காலிப்பணியிடங்களை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வேலையின் விவரங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

முக்கிய தேதிகள் :

விண்ணப்பிக்க தொடங்கிய தேதி

12-07-2024

விண்ணப்பிக்க கடைசி தேதி

27-07-2024

காலியிட விவரங்கள் :

1- தொழில்நுட்ப உதவியாளர் (Techinical Assistant)

கல்வி தகுதி :

இந்த வேலைக்கான காலிப்பணியிடங்களுக்கு அரசின் அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பிஎஸ்சியில் (B.Sc) ஏதேனும் ஒரு அறிவியல் பாடப்பிரிவில் கட்டாயமாக பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், அதனுடன் அடிப்படையான கணினி அறிவை கொண்டிருக்க வேண்டும்.

சம்பள விவரம் :

தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.25,000/-  வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

வயது & இடம் :

வயது வரம்பு

குறிப்பிடவில்லை

பணியமர்த்தப்படும் இடம்

கோயம்புத்தூர்- தமிழ்நாடு

விண்ணப்பிக்கும் முகவரி :

வனச்சரக அலுவலகம், காரமடை வனச்சரகம், காரமடை, கோவை – 641104 என்ற முகவரிக்கு கடைசி தேதியான 27-07-2024-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணிக்காக விண்ணப்பிக்க முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமானhttps://www.forests.tn.gov.in/பார்வையிட்டு இந்த வேலைக்கான விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

அல்லது இந்தPDF-ஐ கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த படிவத்தை நன்கு சரிபார்த்து, சரியாக பூரித்து செய்ய வேண்டும்.

அதன்பின் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைத்து மேற்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

குறிப்பு : – விண்ணப்பக்கட்டணம் கிடையாது.