பெண்களே!! தமிழக அரசு வேலைவாய்ப்பு.. நாளை கடைசி நாள்! உடனே விண்ணப்பியுங்கள்…

Tamilnadu Govt Employment

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு : தென்காசி மாவட்டத்தில் தனியார் மற்றும் பொது இடங்களில் குடும்பத்தில் சமுதாயத்தில், பணிபுரியும் இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் சகி ஒன் ஸ்டாப் சென்டர் (Sakhi – One Stop Centre) துவங்கப்பட்டுள்ளது.

அந்த சமூக நல அலுவலகம் சார்பில, சுழற்சி முறையில் பணிபுரிய வழக்கு பணியாளர் (பெண்), பல்நோக்கு உதவியாளர் (பெண்) மற்றும பாதுகாவலர் (ஆண்), ஆகிய பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தென்காசி மாவட்டத்தை சார்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நாளை தான் கடைசி நாள் என்பதால், நாளை (20.07.2024 ) 5 மணிக்குள் இதற்கு விண்ணப்பிக்கும் ஆர்வமுள்ள தென்காசி மாவட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, பணிமுன் அனுபவம் மற்றும் ஊதிய விவரங்கள் பற்றி www.tenkasi.nic.in என்ற இணைத்தளத்தில் தெரிந்து கொண்டு, விண்ணப்பத்தை தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முக்கிய தேதிகள் :

விண்ணப்பிக்க தொடங்கிய தேதி 03.07.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.07.2024

காலியிட விவரங்கள் : 

பதவியின் பெயர் காலியிடங்கள்
வழக்கு பணியாளர் 2
பாதுகாவலர் 1
பல்நோக்கு உதவியாளர் 1

சம்பளம் விவரம் :

  • வழக்கு பணியாளருக்கு சம்பளமாக 18,000/- வழங்கப்படும்.
  • பாதுகாவலருக்கு சம்பளமாக 12,000/- வழங்கப்படும்.
  • பல்நோக்கு உதவியாளக்கு சம்பளமாக  10,000/- வழங்கப்படும்.

கல்வித் தகுதி மற்றும் அனுபவம் :

  • வழக்கு பணியாளர் – சமூகப் பணி அல்லது உளவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.
  • பாதுகாவலர் – பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தன்னார்வ தொண்டு நிறுவனங்களி ல் பணிபுரிந்த 4 வருட முன் அனுபவம் வேண்டும்.
  • பல்நோக்கு உதவியாளர் – பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சமையல் வேலைகளில் 1 வருட முன் அனுபவம் வேண்டும்.

குறிப்பு :

  1. வழக்கு பணியாளர் மற்றும் பல்நோக்கு உதவியாளர் பணிக்கு விண்ணப்பதாரர்களிடமும், பாதுகாவலர் பணிக்கு ஆண் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
  2. பெண் விண்ணப்பதாரர்களிடமும்  தென்காசி மாவட்டத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.
  3. 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்ற தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்பிட வேண்டிய முகவரி :

மாவட்ட சமூகநல அலுவலகம்,

140/5B ஸ்ரீ சக்திநகர்,

தென்காசி- 627 811

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்