நீதிமன்றத்தில் அரசு வேலை …37 காலியிடங்களை நிரப்ப அறிய வாய்ப்பு ..! யூஸ் பண்ணிக்கோங்க !!

TN Public Sector Job

TN Public Sector ஆட்சேர்ப்பு : தமிழகத்தில் சென்னை மட்டும் மதுரையில் உள்ள நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பொதுத்துறை வேலைவாய்ப்பு 2024 சார்பாக 37 சட்ட அதிகாரி காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.  இந்த வேலைக்கான கல்வி தகுதி, விண்ணப்பிக்கும் முறை என அனைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காலியிட விவரங்கள் :

பதவியின் பெயர் காலியிடங்கள்
கூடுதல் அட்வகேட் ஜெனரல் 1
சிறப்பு அரசு வழக்கறிஞர் 8
கூடுதல் அரசு வழக்கறிஞர் 4
அரசு வழக்கறிஞர் சிவில் 14
கிரிமினல் அரசு வழக்கறிஞர் 9
அரசு வழக்கறிஞர் வரிகள் 1
மொத்தம் 37

 

கல்வி தகுதி :

மேற்கண்ட வழங்கறிஞர் பணிகளுக்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளால் அங்கீகரிப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து கட்டாயமாக இளங்கலை சட்டத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

முக்கிய தேதிகள் :

விண்ணப்பிக்க தொடங்கிய தேதி 05.07.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.07.2024

 

சம்பள விவரம் : 

சம்பள விவரங்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை, ஆனால் கட்டயமாக தமிழக அரசு நிர்ணயித்துள்ள விதிகளின் அடிப்படையில் அந்தந்த பதவிகளுக்கு ஏற்ப மாத சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட இந்த வழக்கறிஞர் பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து மற்றும் தேவைப்படும் சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து பதிவு அஞ்சல் அதாவது ‘Registered Post’ மூலம் சரியான முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

பிற விவரங்கள் : 

வயது வரம்பு வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
விண்ணப்ப கட்டணம் கிடையாது
பணியமர்த்தப்படும் இடம் சென்னை, மதுரை

 

விண்ணப்பிக்கும் முகவரி :

செயலாளர், தமிழ்நாடு பொதுத்துறை, தலைமை செயலகம், சென்னை – 600009.

(குறிப்பு : விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை மேற்கண்ட முகவரிக்கு கடைசி தேதியான 22.07.2024 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும். அதாவது தங்களது விண்ணப்பங்கள் இந்த முகவரிக்கு இந்த நேரத்திற்குள் சென்றடைந்துருக்க வேண்டும்.)

மேலும், இந்த வழக்கறிஞர் பணியிடங்களுக்கான மேற்கொண்ட தகவலை தெரிந்து கொள்ள இந்த PDF-ஐ கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். இதன் அதிகாரபூர்வ அறிவிப்பை தெரிந்த கொள்ள அரசாங்கத்தின் இந்த அதிகாரபூர்வ  https://www.tn.gov.in/announcements இணையதள பக்கத்திலும் தெரிந்து கொள்ளலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்