இளங்கலை பட்டதாரிகளே உங்களுக்கு தான்! தெற்கு ரயில்வே அறிவித்துள்ள பல்வேறு பணிகள்!
தெற்கு ரயில்வே பல்வேறு பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, தகுதியுடையவர்கள் தகுந்த முறைப்படி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
சென்னை : தெற்கு இரயில்வே அவ்வபோது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை வெளியீட்டு வருகிறது. அந்தவகையில் , தற்போது பல்வேறு பிரிவுகளில் பல பதவிகளுக்கான விண்ணப்பங்களை அழைக்கிறது.
அதன்படி, மருத்துவத்திற்காக (Para Medical) அதனுடைய பிரிவில் 1,376 காலியிடங்கள் இருப்பதாகவும், தொழில்நுட்பம் அல்லாத (NTPC) முதுகலை பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு 8,113 காலியிடங்கள் இருப்பதாகவும், இளங்கலை பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு 3,445 காலியிடங்கள் இருப்பதாகவும், அறிவித்துள்ளது.
எனவே, விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் மற்றும் ரயில்வே துறையில் வேலையை தேடிக்கொண்டு இருப்பவர்கள் விண்ணப்பம் செய்துகொள்ளுங்கள்.
முக்கிய தேதிகள்
- Para Medical – 17.08.2024 முதல் 16.09.2024 வரை விண்ணப்பிக்கலாம்
- Graduate NTPC Under – 14.09.2024 முதல் 13.10.2024 வரை விண்ணப்பிக்கலாம்
- Graduate – 21.09.2024 முதல் 20.10.2024 வரை விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பம் செய்ய வேண்டிய முறை
மேற்கண்ட பணிகளில் வேலைக்கு சேர உங்களுக்கு ஆர்வமும், தகுதியும் இருந்தால் நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://rrbchennai.gov.in/ க்கு சென்று அதில் உங்களுக்கு விருப்பமான வேலைக்கான விளம்பரத்தை கிளிக் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தேவையான ஆவணங்களை வைத்து வேலைக்கு விண்ணப்பம் செய்து கொள்ளுங்கள்.
???? Southern Railway is hiring! ????
Apply now for Para Medical (1,376), NTPC Graduate (8,113), and NTPC Undergraduate (3,445) positions.
???? Important dates:
Apply at https://t.co/UYC95WtD9W. Don’t miss out!#railwayrecruitment2024 #southernrailway pic.twitter.com/CEFzI94qus
— Southern Railway (@GMSRailway) September 13, 2024