பிளஸ் டூ முடித்தவர்களுக்கு இந்திய கடற்படையில்  வேலைவாய்ப்பு.. 2500 காலிப்பணியிடங்கள்..!

Published by
Jeyaparvathi

இந்திய கடற்படை SSR AA 2022 ஆட்சேர்ப்பு:

பிளஸ் டூ முடித்த திருமணமாகாத இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாலுமிகளாக சேர்வதற்கு திருமணமாகாத ஆண்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படை SSR AA 2022:

SSR: senior secondary recruitment (மூத்த இரண்டாம் நிலை ஆள்சேர்ப்பு)

AA: artificer apprentice (கலைஞர் பயிற்சி)

காலியிடங்கள்:

இந்திய கடற்படையில்  மொத்தம் 2500 காலியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.இந்த பணியிடங்கள் இரண்டு பதவிகளுக்கு தனித்தனியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியின் அடிப்படையில் மட்டுமே  பணியமர்த்தப்படுவார்கள்.

பதவிகள் காலியிடங்களின் எண்ணிக்கை
ஏஏ 500
எஸ்.எஸ்.ஆர் 2000

 

இந்திய கடற்படை SSR AA காலியிடங்கள் 2022:

நிறுவன பெயர் இந்திய கடற்படை
பணியிடங்கள் பெயர் மூத்த இரண்டாம் நிலை ஆட்சேர்ப்பு [எஸ்எஸ்ஆர்] & ஆர்டிஃபைசர் அப்ரண்டிஸ் [ஏஏ]
மொத்த காலியிடம் 2500
வேலை இடம் இந்தியா
ஆன்லைன் விண்ணப்பப் பதிவு  தொடக்க தேதி 29 மார்ச் 2022
ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடைசி தேதி 05 ஏப்ரல் 2022
வயது எல்லை 17 – 20
இணையதளம் www.joinindianarmy.gov.in

 

வயது வரம்பு:

உங்கள் வயது 17 முதல் 20 வயது வரை இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்கமுடியும். விண்ணப்பதாரர்கள் 1-8-2002 முதல் 31-7-2005 வரை (இரண்டு தேதிகளையும் சேர்த்து) பிறந்திருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் நீங்கள் இந்த பதவிக்கு எளிதில் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி:

எஸ்எஸ்ஆர், ஏஏ என்ற இரண்டு பதவிகளுக்கும் தனித்தனியாக கல்வித்தகுதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில்  பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.12-ம் வகுப்பில், ஹிச்டோரி மற்றும் ஆர்ட்ஸ் பாடப்பிரிவினர்  இந்த பதவிக்கு விண்ணப்பிக்க முடியாது.

பதவிகள் கல்வி விவரங்கள்
ஏஏ இந்தியாவின் கல்வி அமைச்சகத்தால், அரசால்  அங்கீகரிக்கப்பட்ட பள்ளிக் கல்வி வாரியங்களில் இருந்து +2 தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.(கணிதம் மற்றும் இயற்பியல்) படித்திருக்க வேண்டும்.

கணிதம் & இயற்பியலில் 60% அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்றிருக்க  வேண்டும்.

அதனுடன் வேதியியல்/உயிரியல்/கணினி அறிவியல் பாடங்கள் படித்தவராக இருக்க வேண்டும்.

எஸ்.எஸ்.ஆர் 60% மதிப்பெண்  பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

இந்தியாவின் கல்வி அமைச்சகத்தால், அரசால்  அங்கீகரிக்கப்பட்ட பள்ளிக் கல்வி வாரியங்களில் இருந்து +2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முக்கியமாக கணிதம் மற்றும் இயற்பியல் படித்திருக்க வேண்டும்.

அதனுடன் வேதியியல்/உயிரியல்/கணினி அறிவியல் பாடங்கள் படித்திருக்க வேண்டும்.

 

ஊதிய விவரங்கள்:

இந்த பதவியில் ரூ.21,700/- முதல் அதிகபட்சமாக ரூ.69,100/-வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

1)CBT எழுத்து தேர்வு

2)உடல் தகுதி சோதனை(PFT)

3)மருத்துவ பரிசோதனை அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.

எழுத்து தேர்வு:

  • இரண்டு பதவிகளுக்கும் (SSR,AA) ஒரே எழுத்து தேர்வு. தேர்வு வினாக்கள் ஆங்கிலம்  மற்றும் இந்தியில் இருக்கும்.
  • மே அல்லது ஜூன் மாதம் எழுத்து தேர்வு நடைபெறும்.
தேர்வின் பாடங்கள் கேள்விகளின் எண்ணிக்கை மதிப்பெண்கள் கால அளவு
ஆங்கிலம் 25 25

1 மணி நேரம்

(60 நிமிடங்கள்)

விஞ்ஞானம் 25 25
கணிதம் 25 25
பொது அறிவு 25 25
மொத்தம் 100 100

 

விண்ணப்பகட்டணம்:

விண்ணப்பங்கள்  பொது சேவை மையங்களில் (CSC ) பதிவு செய்து கொள்ளலாம். நிலையான விண்ணப்பக்கட்டணம்  ரூ.60+GST.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்யமுடியும். www.joinindianarmy.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

 

Recent Posts

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

20 mins ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

23 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

1 hour ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

1 hour ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

2 hours ago

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

2 hours ago