பிளஸ் டூ முடித்தவர்களுக்கு இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு.. 2500 காலிப்பணியிடங்கள்..!

இந்திய கடற்படை SSR AA 2022 ஆட்சேர்ப்பு:
பிளஸ் டூ முடித்த திருமணமாகாத இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாலுமிகளாக சேர்வதற்கு திருமணமாகாத ஆண்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடற்படை SSR AA 2022:
SSR: senior secondary recruitment (மூத்த இரண்டாம் நிலை ஆள்சேர்ப்பு)
AA: artificer apprentice (கலைஞர் பயிற்சி)
காலியிடங்கள்:
இந்திய கடற்படையில் மொத்தம் 2500 காலியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.இந்த பணியிடங்கள் இரண்டு பதவிகளுக்கு தனித்தனியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியின் அடிப்படையில் மட்டுமே பணியமர்த்தப்படுவார்கள்.
பதவிகள் | காலியிடங்களின் எண்ணிக்கை |
ஏஏ | 500 |
எஸ்.எஸ்.ஆர் | 2000 |
நிறுவன பெயர் | இந்திய கடற்படை |
பணியிடங்கள் பெயர் | மூத்த இரண்டாம் நிலை ஆட்சேர்ப்பு [எஸ்எஸ்ஆர்] & ஆர்டிஃபைசர் அப்ரண்டிஸ் [ஏஏ] |
மொத்த காலியிடம் | 2500 |
வேலை இடம் | இந்தியா |
ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்க தேதி | 29 மார்ச் 2022 |
ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடைசி தேதி | 05 ஏப்ரல் 2022 |
வயது எல்லை | 17 – 20 |
இணையதளம் | www.joinindianarmy.gov.in |
வயது வரம்பு:
உங்கள் வயது 17 முதல் 20 வயது வரை இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்கமுடியும். விண்ணப்பதாரர்கள் 1-8-2002 முதல் 31-7-2005 வரை (இரண்டு தேதிகளையும் சேர்த்து) பிறந்திருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் நீங்கள் இந்த பதவிக்கு எளிதில் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி:
எஸ்எஸ்ஆர், ஏஏ என்ற இரண்டு பதவிகளுக்கும் தனித்தனியாக கல்வித்தகுதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.12-ம் வகுப்பில், ஹிச்டோரி மற்றும் ஆர்ட்ஸ் பாடப்பிரிவினர் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க முடியாது.
பதவிகள் | கல்வி விவரங்கள் |
ஏஏ | இந்தியாவின் கல்வி அமைச்சகத்தால், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிக் கல்வி வாரியங்களில் இருந்து +2 தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.(கணிதம் மற்றும் இயற்பியல்) படித்திருக்க வேண்டும்.
கணிதம் & இயற்பியலில் 60% அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அதனுடன் வேதியியல்/உயிரியல்/கணினி அறிவியல் பாடங்கள் படித்தவராக இருக்க வேண்டும். |
எஸ்.எஸ்.ஆர் | 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
இந்தியாவின் கல்வி அமைச்சகத்தால், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிக் கல்வி வாரியங்களில் இருந்து +2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முக்கியமாக கணிதம் மற்றும் இயற்பியல் படித்திருக்க வேண்டும். அதனுடன் வேதியியல்/உயிரியல்/கணினி அறிவியல் பாடங்கள் படித்திருக்க வேண்டும். |
ஊதிய விவரங்கள்:
இந்த பதவியில் ரூ.21,700/- முதல் அதிகபட்சமாக ரூ.69,100/-வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை:
1)CBT எழுத்து தேர்வு
2)உடல் தகுதி சோதனை(PFT)
3)மருத்துவ பரிசோதனை அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.
எழுத்து தேர்வு:
- இரண்டு பதவிகளுக்கும் (SSR,AA) ஒரே எழுத்து தேர்வு. தேர்வு வினாக்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருக்கும்.
- மே அல்லது ஜூன் மாதம் எழுத்து தேர்வு நடைபெறும்.
தேர்வின் பாடங்கள் | கேள்விகளின் எண்ணிக்கை | மதிப்பெண்கள் | கால அளவு |
ஆங்கிலம் | 25 | 25 |
1 மணி நேரம் (60 நிமிடங்கள்) |
விஞ்ஞானம் | 25 | 25 | |
கணிதம் | 25 | 25 | |
பொது அறிவு | 25 | 25 | |
மொத்தம் | 100 | 100 |
விண்ணப்பகட்டணம்:
விண்ணப்பங்கள் பொது சேவை மையங்களில் (CSC ) பதிவு செய்து கொள்ளலாம். நிலையான விண்ணப்பக்கட்டணம் ரூ.60+GST.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்யமுடியும். www.joinindianarmy.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.