மத்திய சரக்கு மற்றும் சேவை வரி தீர்ப்பாயத்தில் வேலை வாய்ப்பு.!
GSTAT: மத்திய சரக்கு மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (DoR GSTAT) காலியாக உள்ள 96 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனை விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தை படித்துவிட்டு வருவாய்த் துறையின் அதிகாரபூர்வ இணையதளமான https://dor.gov.in/gstat-recruitment என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு விண்ணப்பிக்கும் தொடக்க தேதியானது கடந்த மாதம் 19ம் தேதி தொடங்கியது. இப்பொது, விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் குறித்து சட்டம் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் விதிகளால் நிர்வகிக்கப்படும். அது குறித்து கூடுதல் தகவலுக்கு பின்வருமாறு.
கட்டணம்
ஏந்தவித கட்டணமும் இல்லை
வயது
50 வயது முதல் 67 வயது வரை
பணியின் விவரங்கள்
நீதித்துறை உறுப்பினர் – 63
தொழில்நுட்ப உறுப்பினர் (மையம்) – 32
தொழில்நுட்ப உறுப்பினர் (மாநிலம்) – 1
சம்பளம்
2,25,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
புது டெல்லியில் அமைந்துள்ள இதன் மெயின் பிராஞ் மற்றும் பல்வேறு இடங்களிலும் உள்ள காலியிடங்களுக்கான அறிவிப்பையும் வெளியிடப்பட்டுள்ளது.
அனுபவம் நிறைந்த நபர்களுக்கு மட்டுமே இந்த பணியிடங்களில் சேருவதற்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ன. அதற்கு ஏற்றார் போல் தான் சம்பளமும் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு, எந்தவொரு விண்ணப்பமும் பெறபடாது.