திருச்சி மாவட்டத்தில் குழந்தைகள் நலத்துறையில் வேலைவாய்ப்பு.! உடனே முந்துங்கள்…
குழந்தைகள் நலத்துறை ஆட்சேர்ப்பு 2024 : திருச்சி மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் இயங்கும் அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கியிருக்கும் குழந்தைகளுக்கு ஆற்றுப்பபடுத்துநர்கள் மூலம் மதிப்பூதியம் அடிப்படையில் ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பதவிக்கு தகுதியான விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பங்களை திருச்சி மாவட்ட https://tiruchirappalll.nic.in என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொண்டு விண்ணப்பிக்கவும். இந்த வேலைக்கான அடிப்படை தகுதி மற்றும் காலிப்பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது போன்ற தகவல்கள் பற்றிய முழு விவரம் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய தேதி :
விண்ணப்பிக்க தொடங்கிய தேதி | 24-07-2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 14-08-2024 |
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் தகுதியான உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
காலியிட விவரங்கள் :
குழந்தைகளுக்கான ஆற்றுப்படுத்துநர்கள் | 2 |
மொத்தம் | 2 |
வயது வரம்பு :
அறிக்கையின் படி, வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை. விதிகளின் படி வயது வரம்பு மற்றும் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம் விபரம் :
பணிக்கு வருகையின் அடிப்படையில் ஒரு வருடத்திற்கு 108 நாட்களுக்கு மிகாமல் மதிப்பூதியம் அடிப்படையில் ஒரு வருகைக்கு போக்குவரத்து செலவு உட்பட ரூ.1000 வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் தேர்வுக்குழு மூலம் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
முகவரி :
கண்காணிப்பாளர்,
அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லம்,
ஆவூர் ரோடு,
மாத்தூர்(இ).
திருச்சி -622515.
மேலே குறிப்பிடப்பட்ட முகவரிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 22-08-2024 அன்று மாலை 5 மணிக்குள் வந்த சேருமாறு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பு : மேற்கூறிய காலவரைக்கு பின்பு கொள்ளப்பட மாட்டாது.