மிஸ் பண்ணிராதீங்க ..! ரூ.13,000 சம்பளத்தில் நல்வாழ்வு சங்கத்தில் அதிரடி வேலை ..!
சுகாதார சேவைகள் இயக்குநரகம் ஆட்சேர்ப்பு : தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி திருவண்ணாமலை மாவட்ட நல்வாழ்வு சங்கம் சுகாதார சேவைகள் இயக்குநரகம் (Directorate of Health Services-DHS) ஆட்சேர்ப்பு 2024 சார்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் தெரிவிக்கப்பட்ட இந்த பணிகளுக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பத்தை சமர்ப்பித்துக்கொள்ள வேண்டும். அத்துடன் விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் அடைந்திருக்க வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் இதர தகுதிகள் பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய தேதிகள் :
விண்ணப்பம் தொடங்கிய தேதி | 25/07/2024 |
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி | 10/08/2024 |
காலியிட விவரங்கள் :
பதவியின் பெயர் | காலியிடங்கள் எண்ணிக்கை |
ஆடியோலஜிஸ்ட் மற்றும் பேச்சு சிகிச்சையாளர் | 1 |
பிசியோதெரபிஸ்ட் | 2 |
ANM / பல்நோக்கு சுகாதார பணியாளர் | 1 |
சம்பளம் :
- இந்த வேலைக்கான மாத சம்பளமானது ரூ.13,000 முதல் ரூ.23,000 வரை வழங்கப்படும்.
கல்வி தகுதி :
- மேற்கண்ட பணிகளான ஆடியோலஜிஸ்ட் மற்றும் பேச்சு சிகிச்சையாளர் பணிகளுக்கு பேச்சில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
- Iamgunge நோயியல் (Bachelor’s Degree in Speech andIamgunge Pathology) துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- பிசியோதெரபிஸ்ட் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பிசியோதெரபியில் இளங்கலை பட்டம் (Bachelor of Physiotherapy (BPT) பெற்றிருக்க வேண்டும்.
- ANM / பல்நோக்கு சுகாதார பணியாளர் (F) பதவிக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட நர்சிங் கல்லூரியில் சேர்ந்து டிப்ளமோவில் பொது செவிலியர் மற்றும் மருத்துவச்சி (GNM) மற்றும் துணை செவிலியர் மருத்துவச்சி (ANM) (Diploma in GNM/ ANM / B.Sc (Nursing))போன்ற ஏதேனும் ஒரு துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
- வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ள விதிகளின் அடிப்படையில் வயது தளர்வு மற்றும் வயது வரம்பு பொருந்தும்.
பணியர்த்தப்படும் இடம் :
திருவண்ணாமலை – தமிழ்நாடு
தேர்தெடுக்கும் முறை :
- இப்பணிக்கு நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
திருவண்ணாமலை மாவட்ட நலவாழ்வு சங்கம் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பத்தைப் பற்றி அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பான https://tiruvannamalai.nic.in/notice_category/recruitment/t/ ஐ கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய அதிகாரபூர்வ இணையதளமான https://tiruvannamalai.nic.in/ யில் பதிவிறக்கம் செய்து அத்துடன் கல்வி தகுதி சான்று, மதிப்பெண் சான்று, சாதிச்சான்றிதழ் போன்றவற்றுடன் இணைத்து கீழ்காணும் முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
கௌரவ செயலாளர் / துணை இயக்குனர் சுகாதார பணிகள்
மாவட்ட நலவாழ்வு சங்கம்,
துணை சுகாதார பணிகள் அலுவலகம்,
பழைய அரசு மருத்துவமனை வளாகம், செங்கம் சாலை,
திருவண்ணாமலை.
குறிப்பு :
விண்ணப்பிக்கும் வேட்பாளர்களிடமிருந்து எந்தவொரு விண்ணப்பக்கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு