மிஸ் பண்ணாதீங்க மக்களே! இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு..உடனே விண்ணப்பிங்க!

indian bank job

Indian Bank : இந்தியன் வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் ஸ்பெஷலிஸ்ட்  துணைத் தலைவர், உதவித் துணைத் தலைவர், இணை மேலாளர் (Deputy Vice President, Assistant Vice President, Associate Manager) ஆகிய வேலைக்கு ஆட்கள் தேவை என காலிபணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

காலியிடங்கள் விவரங்கள்

 துணைத் தலைவர்
30
 உதவி துணைத்தலைவர்
43
 இணை மேலாளர்
29
 மொத்தம் 102

தேவையான கல்வி தகுதி 

இந்த வேலையில் சேர்வதற்கு விண்ணப்பிக்க உங்களுக்கு ஆர்வம் இருந்தது என்றால், CA/CWA/ ICWA, பட்டம், பிஜி டிப்ளமோ/ பட்டம் (சம்பந்தப்பட்ட துறை) பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு 

வயது வரம்பை பொறுத்தவரையில், வேலையில் சேர விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 23 வயது எனவும், அதிகபட்ச வயது 40 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய நாட்கள்

விண்ணப்பிப்பம் தொடங்கிய தேதி 29-06-2024
கடைசி தேதி 14-07-2024

விண்ணப்பக்கட்டணம்

இந்த வேலையில் சேர விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ. 1000/- (ஜிஎஸ்டி உட்பட) விண்ணப்பக்கட்டணம்  செலுத்தவேண்டும். SC/ST/PwBD ஆகிய விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 175/- (ஜிஎஸ்டி உட்பட) விண்ணபட்டக்கட்டணம்.  டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் அல்லது இணைய வங்கியைப் பயன்படுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பட்ட கட்டணம் செலுத்திக்கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த வேலையில் சேர விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான (https://www.indianbank.in/) இணையதளத்திற்கு சென்று அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரத்தை விண்ணப்பித்து கொள்ளலாம். இல்லையெனில், மேலும் ஆன்லைன்  மூலம் விண்ணப்பிக்க https://ibpsonline.ibps.in/ibesmarc24/basic_details.php பக்கத்திற்கு சென்று அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை வைத்து விண்ணப்பம் செய்து கொள்ளுங்கள். மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள இந்த PDF-ஐ க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi