வேலைவாய்ப்பு

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகளில் 198 வேலைவாய்ப்புகள்.. முழு விவரம் இதோ…

Published by
மணிகண்டன்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைகளில் இருக்கும் பல்வேறு பிரிவுகளில் உள்ள 198 வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு துறைகளுக்கான காலிப்பணியிட அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. மொத்தமாக 27 துறைகளில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க இளங்கலை மருத்துவ படிப்பான MBBS , பல் மருத்துவ படிப்பான BDS ஆகிய பட்டங்களை பெற்றிருக்க வேண்டும்.

இதற்கு விண்ணப்பிக்க, 25,000 ரூபாய் டெபாசிட் தொகையாக கட்ட வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு உறுதியான பின்பு தொகை திருப்பி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்க்கான விண்ணப்பங்கள் தொடங்கும் தேதி 03 ஜூன் 2023 என அறிவிக்கப்பட்டுள்ளது . கடைசி தேதியாக 17 ஜூன் 2023 என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணிகள் –

அவசரகால மருத்துவர்கள், அவசரகால மருத்துவர்கள் (தீவிர சிகிச்சை பிரிவு), தீக்காய பிரிவு மருத்துவார்கள், அறுவை சிகிச்சை பிரிவு, ரத்த பிரிவு, இதய சிகிச்சை பிரிவு என மொத்தம் 27 பிரிவுகளில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடங்கள் :

  • அவசர மருத்துவம் – 76
  • அவசர மருத்துவம் (தீவிர சிகிச்சை பிரிவு) – 12
  • தீக்காயங்கள் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை – 8
  • இரத்த வங்கி – 13
  • இருதயவியல் ரேடியாலஜி – 1
  • இருதயவியல் (பொது) -1
  • ஆய்வகம் மற்றும் மருந்து பிரிவு – 2
  • சிறுநீரகவியல் -3

உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கல்வித்தகுதி :

  • இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படி பயிற்சியுடன் கூடிய MBBS மருத்துவ படிப்பு அல்லது பல் மருத்துவ படிப்பான BDS ஆகியவை முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் விவரம் (மாத அடிப்படையில்) :

  • 15,600 + 5,400 முதல் 56,100 ரூபாய் வரை (அனுபவம் மற்றும் தகுதிக்கு ஏற்ப)

வயது வரம்பு –(குறிப்பிடப்படவில்லை)

தேர்வு செய்யப்படும் முறை : 

  • தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் செய்யப்படும் நபர்கள் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

  • 25,000 ரூபாய் தொகையினை டெபாசிட் தொகையாக கட்ட வேண்டும். அந்த டெபாசிட் தொகையானது சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்னர் திருப்பி அளிக்கப்படும்.

விண்ணப்பிக்க தொடங்கிய தேதி – 03 ஜூன் 2023.

விண்ணப்பிக்க கடைசி தேதி – 17 ஜூன் 2023.

விண்ணப்பிக்கும் முறை : 

  • டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரப்பூர்வ தளமான jr.aiimsexams.ac.in-க்கு செல்ல வேண்டும்.
  • அதனை தொடர்ந்து அந்த பக்கத்தில் உள்ள NOTIFICATION எனும் லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில் விண்ணப்பிக்கும் முறை, காலிப்பணியிட விவரங்கள் , கல்வித்தகுதி உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அதில் இடம்பெற்று இருக்கும்.
  • அதன் படி உரிய காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
Published by
மணிகண்டன்

Recent Posts

கிடைத்தது முக்கிய அங்கீகாரம்… இனி நாம் தமிழர் கட்சியும் ஒரு மாநில கட்சி!

சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…

6 hours ago

த.வெ.க மாவட்ட செயலாளர்கள் நியமன குழப்பம்! அடுத்தடுத்த நகர்வுகள் என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…

6 hours ago

இஸ்ரோ வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! நாளை விண்ணில் ‘மிக’ முக்கிய நிகழ்வு!

டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…

8 hours ago

சட்டப்பேரவையில் காரசார விவாதம்.. ஈபிஎஸ்க்கு சவால் விடுத்த மு.க ஸ்டாலின்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…

9 hours ago

“சீமான் கருத்துக்கள் பதற்றத்தை ஏற்படுத்துகிறது!” உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…

9 hours ago

கரடு முரடான ரோட்டிற்கு குட்’பை’… விரைவில் வருகிறது பறக்கும் கார்? வைரல் வீடியோ உள்ளே…

சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில்,  சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…

10 hours ago