விருதுநகர் : தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், விருதுநகர் மாவட்டத்தில், 8 சமூக அமைப்பாளர் பணியிடங்களை பணியமர்த்த முடிவு செய்து தற்போது அதனைப்பற்றிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியில் சேர எப்படி விண்ணப்பம் செய்யவேண்டும், என்னென்ன கல்வி தகுதியை பெற்றிருக்க வேண்டும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள் விவரம்
பதவியின் பெயர் |
இடம் |
எண்ணிக்கை |
சமூக அமைப்பாளர் |
சிவகாசி மாநகராட்சி |
3 |
சமூக அமைப்பாளர் |
அருப்புக்கோட்டை |
1 |
சமூக அமைப்பாளர் |
இராஜபாளையம் |
1 |
சமூக அமைப்பாளர் |
விருதுநகர் நகராட்சி |
1 |
சமூக அமைப்பாளர் |
திருவில்லிபுத்தூர் |
1 |
சமூக அமைப்பாளர் |
சேத்தூர் &செட்டியார்பட்டி |
1 |
தேவையான கல்வித்தகுதி
- இந்த சமூக அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பம் செய்த விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் தேர்ச்சி மற்றும் கணினி இயக்கத்தில் அடிப்படை தகுதிகளை (MS Office) பெற்றிருத்தல் கட்டாயமாகும்.
சம்பளம் எவ்வளவு
பதவியின் பெயர் |
இடம் |
சம்பளம் |
சமூக அமைப்பாளர் |
சிவகாசி மாநகராட்சி |
ரூ-16,000 |
சமூக அமைப்பாளர் |
அருப்புக்கோட்டை |
ரூ.15,000 |
சமூக அமைப்பாளர் |
இராஜபாளையம் |
ரூ. 14,000 |
சமூக அமைப்பாளர் |
விருதுநகர் நகராட்சி |
ரூ. 14,000 |
சமூக அமைப்பாளர் |
திருவில்லிபுத்தூர் |
ரூ. 14,000 |
சமூக அமைப்பாளர் |
சேத்தூர் & செட்டியார்பட்டி |
ரூ. 14,000 |
வயது வரம்பு
- இந்த பணியில் வேலைக்கு சேர விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள், 05.08.2024 தேதி நிலையில் அதிபட்சம் 35 வயதிற்கு உட்பட்டவராகவும், இருக்க வேண்டும்.
குறிப்பு :
- விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவராகவும், இருசக்கர வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
- மகளிர் குழுக்கள் திட்டம் தொடர்பாக ஒரு வருட கால களப்பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- பகுதி அளவிலான கூட்டமைப்பில் (ALF)-ல் இரண்டு ஆண்டுகள் உறுப்பினராக உள்ளவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- இதற்கு முன் இது போன்ற மகளிர் குழுக்கள் சம்மபந்தப்பட்ட அலுவலகங்களில் பணி நீக்கம் செய்யப்பட்டவராக இருத்தல் கூடாது.
விண்ணப்பம் செய்வது எப்படி?
- இந்த பணியில் வேலை சேர விருப்பமும், அதற்கான தகுதியும் உங்களுக்கு இருந்தால் நீங்கள் ஆன் லைன் வழியாக மட்டுமே விண்ணப்பம் செய்துகொள்ள முடியும்.
- முதலில் நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.virudhunagar.nic.in என்ற இணையதளத்திற்கு செல்லவேண்டும். அப்படி இல்லை என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
- பின், அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை நிரப்பவேண்டும்.
- நிரப்பிய பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவேண்டும்.
முக்கிய நாட்கள்
விண்ணப்பம் தொடங்கிய தேதி |
26-08-2024 |
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி |
05-09-2024 |
முக்கிய விவரம்