வேலைவாய்ப்பு

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கான வேலைவாய்ப்பு..! மாதம் ரூ.22,744 சம்பளத்துடன்..சீக்கிரம் விண்ணப்பிங்க..!

Published by
செந்தில்குமார்

ஐசிஎஸ்ஐஎல் (ICSIL) காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு ஆள்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இன்டலிஜென்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் (Intelligent Communication Systems India Limited – ICSIL) டெல்லி மாநில புற்றுநோய் நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு ஆள்சேர்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளில் சேருவதற்கு ஆர்வம் மற்றும் தகுதியுள்ளவர்கள் ஆள்சேர்ப்புக்கான Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படித்து விட்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

டெல்லி மாநில புற்றுநோய் நிறுவனத்தில் சமையல்காரர்(1) மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்(5)(Data Entry Operator) பணிகள் காலியாக உள்ளன. இந்த பணிகளுக்கு மொத்தம் 6 காலியிடங்கள் உள்ளன.

தகுதி: 

  • சமையல்காரர் பணிக்கு படிப்பு தகுதி தேவையில்லை.
  • டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பிப்பவர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்திலிருந்து பி.எஸ்.சி(B.Sc) / பி.ஏ.(BA) / பி.காம் (B.Com) பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
  • MS Word, MS Excel, MS Powerpoint போன்ற பயன்பாடுகள் தெரிந்திருக்க வேண்டும்.
  • ஆங்கிலம்/இந்தியில் தட்டச்சு வேகம் குறைந்தபட்சம் 30wpm ஆக இருக்க வேண்டும்.
ICSIL Recruitment [Image Source : ICSIL]

அனுபவம்:

  • மருத்துவமனை சமையலறையில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.
  • அரசு மருத்துவ நிறுவனத்தில் குறைந்தபட்சம் 100 படுக்கைகள் கொண்ட சிறப்பு மருத்துவ நிறுவனத்தில் அலுவலக உதவியாளர்/DEO ஆக குறைந்தது 3 மாதங்கள் இருக்க வேண்டும்.

வயது:

மேற்கண்ட காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவரின் வயது 35 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

  • மேற்கண்ட காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர் https://icsil.in/app/ அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  • விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித் தகுதி (உயர்நிலைப் பள்ளி முதல் உயர்நிலைத் தகுதி வரை) மற்றும் அனுபவம் என அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தில் நிரப்பவும்.
  • ஒரு பதவிக்கு விண்ணப்பிக்க, வேட்பாளரின் சுயவிவரம் அந்த பதவிக்கான விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி அளவுகோல்களுடன் பொருந்த வேண்டும்.
  • விண்ணப்பிப்பதில் ஏதேனும் சந்தேகமிருப்பின் Help -ஐ கிளிக் செய்து எப்படி விண்ணப்பிப்பது என்பதை காணலாம்.
  • இது தொடர்பான கேள்விகள்/உதவிகளுக்கு, கீழே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரியைத் தொடர்புகொள்ளலாம்.
ICSIL Recruitment [Image Source : ICSIL]

விண்ணப்பக்கட்டணம்: 

மேற்கண்ட காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து பிரிவினரும் கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும்.

சம்பளம் மற்றும் கடைசி தேதி:

சமையல்காரர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு மாதம் 18,993 ரூபாயும், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு மாதம் 22,744 ரூபாயும் ஊதியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 5 ஆகும். கடைசி தேதி முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

லண்டன் சென்று வந்த பிறகு அண்ணாமலைக்கு என்ன ஆனது எனத் தெரியவில்லை-திருமாவளவன் பேச்சு!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

17 minutes ago

FIR-ஐ வெளியிட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் – தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

1 hour ago

“எனக்கு நானே சாட்டையடி கொடுக்கப் போகிறேன்” பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

2 hours ago

கல்யாண வீட்டு ஸ்பெஷல்..மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?.

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்  பார்க்கலாம்.…

2 hours ago

புது புது முயற்சி விடாமுயற்சி! அசத்தல் அப்டேட் கொடுத்த அனிருத்!

சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல்  விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…

2 hours ago

சண்டை போட்ட விராட் கோலி…அதிரடியாக அபராதம் போட்ட ஐசிசி!

மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…

3 hours ago