டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கான வேலைவாய்ப்பு..! மாதம் ரூ.22,744 சம்பளத்துடன்..சீக்கிரம் விண்ணப்பிங்க..!
ஐசிஎஸ்ஐஎல் (ICSIL) காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு ஆள்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இன்டலிஜென்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் (Intelligent Communication Systems India Limited – ICSIL) டெல்லி மாநில புற்றுநோய் நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு ஆள்சேர்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளில் சேருவதற்கு ஆர்வம் மற்றும் தகுதியுள்ளவர்கள் ஆள்சேர்ப்புக்கான Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படித்து விட்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்:
டெல்லி மாநில புற்றுநோய் நிறுவனத்தில் சமையல்காரர்(1) மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்(5)(Data Entry Operator) பணிகள் காலியாக உள்ளன. இந்த பணிகளுக்கு மொத்தம் 6 காலியிடங்கள் உள்ளன.
தகுதி:
- சமையல்காரர் பணிக்கு படிப்பு தகுதி தேவையில்லை.
- டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பிப்பவர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்திலிருந்து பி.எஸ்.சி(B.Sc) / பி.ஏ.(BA) / பி.காம் (B.Com) பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
- MS Word, MS Excel, MS Powerpoint போன்ற பயன்பாடுகள் தெரிந்திருக்க வேண்டும்.
- ஆங்கிலம்/இந்தியில் தட்டச்சு வேகம் குறைந்தபட்சம் 30wpm ஆக இருக்க வேண்டும்.
அனுபவம்:
- மருத்துவமனை சமையலறையில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.
- அரசு மருத்துவ நிறுவனத்தில் குறைந்தபட்சம் 100 படுக்கைகள் கொண்ட சிறப்பு மருத்துவ நிறுவனத்தில் அலுவலக உதவியாளர்/DEO ஆக குறைந்தது 3 மாதங்கள் இருக்க வேண்டும்.
வயது:
மேற்கண்ட காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவரின் வயது 35 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
- மேற்கண்ட காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர் https://icsil.in/app/ அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித் தகுதி (உயர்நிலைப் பள்ளி முதல் உயர்நிலைத் தகுதி வரை) மற்றும் அனுபவம் என அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தில் நிரப்பவும்.
- ஒரு பதவிக்கு விண்ணப்பிக்க, வேட்பாளரின் சுயவிவரம் அந்த பதவிக்கான விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி அளவுகோல்களுடன் பொருந்த வேண்டும்.
- விண்ணப்பிப்பதில் ஏதேனும் சந்தேகமிருப்பின் Help -ஐ கிளிக் செய்து எப்படி விண்ணப்பிப்பது என்பதை காணலாம்.
- இது தொடர்பான கேள்விகள்/உதவிகளுக்கு, கீழே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரியைத் தொடர்புகொள்ளலாம்.
விண்ணப்பக்கட்டணம்:
மேற்கண்ட காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து பிரிவினரும் கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும்.
சம்பளம் மற்றும் கடைசி தேதி:
சமையல்காரர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு மாதம் 18,993 ரூபாயும், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு மாதம் 22,744 ரூபாயும் ஊதியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 5 ஆகும். கடைசி தேதி முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.