ECE, EEE-யில் டிகிரி முடிச்சுடீங்களா ? விமான நிலையத்தில் அறிய வேலை வாய்ப்பு ..!

விமான நிலையம் ஆட்சேர்ப்பு : AI Airport Services Limited சார்பில் சென்னை விமான நிலையம் ஆட்சேர்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு

Airport Job

விமான நிலையம் ஆட்சேர்ப்பு :AI Airport Services Limited சார்பில் சென்னை விமான நிலையம் ஆட்சேர்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள இந்த காலிப்பணியிடங்களுக்கான முழு விவரங்கள் பார்க்கலாம்.

முக்கிய தேதிகள் :

விண்ணப்பிக்க தொடங்கிய தேதி

01-07-2024

விண்ணப்பிக்க கடைசி தேதி

15-07-2024

காலியிட விவரங்கள் :

இந்த பணிக்கு மொத்தமாக 25 காலியிடங்களை அறிவித்துள்ளனர்.

தகவல் தொழில்நுட்பத் தலைவர் (Chief Of Information Technology)

1

மேலாளர் -தகவல் தொழில்நுட்பம் (Manager -IT)

4

அதிகாரி (Officer-IT)

20

மொத்தம்

25

கல்வி தகுதி :

இந்த பணிகளுக்கு அரசின் அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் பொறியியல் பட்டதாரி -PG (அ) ECE, EEE, Instrumentation, Computer Systems, ITயில் டிப்ளோமா முடித்திருக்க வேண்டும்.

மற்றும் ECE, CS, IT, EEE, Instrumentation டிகிரி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்  :

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் பட்டதாரிகளுக்கு மாத சம்பளமாக ரூ.45,000 முதல் 75,000 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு :

Chief of IT (தலைவர்)

50 வயதிற்குள் இருக்க வேண்டும்

மேனேஜர்

45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

அதிகாரி

பணியமர்த்தப்படும் இடம் :

சென்னை

மும்பை

கொல்கத்தா

அமிர்தசரஸ்

டெல்லி

விண்ணப்பக்கட்டணம் :

அனைத்து விண்ணப்பத்தார்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – ரூ.500/-

SC/ST/ Ex-servicemen விண்ணப்பத்தார்களுக்கு கட்டணம் கிடையாது.

குறிப்பு :-விண்ணப்ப கட்டணத்தை Demand Draft (DD) எனும் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்தைhttps://www.aiasl.in/Recruitmentபார்வையிட்டு இந்த வேலைக்கான விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

அல்லது இந்தPDF-ஐ கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பபடிவத்தை தவிறில்லாமல் படித்து பூர்த்தி செய்ய வேண்டும்.

விண்ணப்ப படிவத்தை சரிபார்த்து பூர்த்தி செய்து அதன் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை உரிய சான்றிதழ்களுடன் இணைத்து மின்னஞ்சல் (E-mail) மூலம்[email protected]மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.

அதுவும் கடைசி தேதியான 15-07-2024-க்குள் அனுப்ப வேண்டும்.

ECE, EEE-யில் டிகிரி முடிச்சுடீங்களா ? விமான நிலையத்தில் அறிய வேலை வாய்ப்பு ..!