காரைக்குடியில் மத்திய அரசு வேலை வாய்ப்பு.! நாளை முதல் நேர்காணல் தொடக்கம்…

CECRI Recruitment 2024

CECRI ஆட்சேர்ப்பு 2024 : காரைக்குடி மாவட்டத்தில், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) கீழ், இயங்கும் முதன்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 36 அப்ரண்டிஸ் பணிக்கான அறிவிப்பு முன்னதாக வெளியானது.

தொழிற்பயிற்சி சட்டம், 1961-ன்படி பயிற்சி அளிப்பதற்காக, ஐடிஐ மற்றும் டெக்னீசியன் (டிப்ளமோ), பட்டதாரி (பட்டம்) பெற்றவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக காரைக்குடியில் நடத்தப்படும் நேர்முகத் தேர்வுக்கு நாளை 30.07.2024 முதல் 01.08.2024 வரை வரவேற்கப்படுகிறார்கள்.

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.cecri.res.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நேர்காணலுக்கு முன், விண்ணப்பதாரர்கள் CECRI அறிவிப்பை கவனமாகப் படித்து தங்ளது தகுதியை உறுதி செய்ய வேண்டும்.

காலியிடங்கள் விவரம் 

வ.எண் வர்த்தகம் காலியிடங்கள்
1 ஃபிட்டர் 4
2 மெஷினிஸ்ட் 1
3 எலக்ட்ரீஷியன் 5
4 வயர்மேன் 4
5 எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் 1
6 Ref. & ஏ/சி மெக்கானிக் 3
7 வரைவாளர் (சிவில்) 1
8 டர்னர் 1
9 பிளம்பர் 2
10 தச்சர் 1
11 வெல்டர் 2
12 PASAA 4

 கல்வி தகுதி விவரங்கள்

  • ஐடிஐ டிரேட் அப்ரண்டிஸ்ஷிப் : சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
  • டெக்னீசியன் (டிப்ளமோ) அப்ரண்டிஸ்ஷிப் : சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
  • பட்டதாரி (பட்டம்) பயிற்சி : பி.எஸ்சி., வேதியியல் , இயற்பியல் பட்டம் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு 

ஐடிஐ டிரேட் அப்ரண்டிஸ்ஷிப் குறைந்தபட்சம் 14 வயது
டெக்னீசியன் (டிப்ளமோ) அப்ரண்டிஸ்ஷிப் 18 வயது முதல் 24 வரை
பட்டதாரி (பட்டம்) பயிற்சி 18 வயது முதல் 24 வரை

தேர்வு செயல்முறை : நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவீர்கள்.

எப்படி விண்ணப்பிப்பது:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்துடன் கீழே குறிப்பிட்டுள்ளபடி சுய சான்றொப்பத்துடன் தொடர்புடைய அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் ஒரு செட் நகல்களுடன் நேர்காணலுக்கு வர வேண்டும்.

நேர்காணல் தேதி:

டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், ECE, EEE மற்றும் சிவில் இன்ஜினியரிங், இளங்கலை இயற்பியல் / வேதியியல் மற்றும் விருந்தினர் மாளிகை மற்றும் கேண்டீன் மேலாண்மை 30.07.2024 காலை 9 மணிக்கு
ஐடிஐ – ஃபிட்டர், மெஷினிஸ்ட், மெக்கானிக் ரெஃப். & ஏ/சி, வெல்டர், டிராஃப்ட்ஸ்மேன் (சிவில்), பிளம்பர், கார்பெண்டர் 31.07.2024 காலை 9 மணிக்கு
ITI – எலக்ட்ரீசியன், வயர்மேன், PASAA, எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், டர்னர் 01.08.2024 காலை 9 மணிக்கு

சம்பளம்

ஐடிஐ டிரேட் அப்ரண்டிஸ்ஷிப் ரூ.8,050
டெக்னீசியன் (டிப்ளமோ) அப்ரண்டிஸ்ஷிப் ரூ.8,000
பட்டதாரி (பட்டம்) பயிற்சி ரூ.9,000

குறிப்பு : 2021, 2022, 2023, 2024 -ல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி மற்றும் தொழில்நுட்ப விண்ணப்பதாரர்கள் மட்டுமே மேலே கொடுக்கப்பட்ட பதிவிகளுக்கு தகுதியானவர்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Bomb threat in EPS house at chennai
Pakistan Minister Khawaja asif
AR Rahman
TN Minister Palanivel Thiyagarajan say about TN Internet
RN Ravi
PahalgamTerroristAttack