மத்திய அரசில் வேலை.. நாளை தான் கடைசி.! சம்பளம் ரூ. 44,000.. உடனே விண்ணப்பியுங்கள்.!

Published by
கெளதம்

மத்திய அரசு வேலை 2024 : மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்தியாவின் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் (EDII) மதுரை மாவட்டத்தில் காலியாக உள்ள திட்ட அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.

ஒப்பந்த அடிப்படையில் வெளியாகியுள்ள திட்ட அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பதாரர்கள் நாளை (ஜூலை 10) மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதனால், மதுரையில் வேலை தேடிக்கொண்டிருக்கும் இந்த பணிக்கு தகுதியுடைய நபர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.

முக்கிய நாட்கள்

விண்ணப்பத்திற்கான தொடக்க தேதி 04.07.2024
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 10-07-2024

பணியின் விபரம்

திட்ட அலுவலர் ( Project Officer )

சம்பளம்

திட்ட அலுவலர் பணிக்கு தகுதியானவருக்கு மாத சம்பளமாகரூ.44,000 வழங்கப்படும்.

கல்வி தகுதி மற்றும் அனுபவம்:

  • கிராமப்புற மேலாண்மை, சமூகப்பணி, பொருளியல், எம்பிஏ ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • சிறு தொழில், தொழில் முனைவோர் மேம்பாடு, சுயவேலைவாய்ப்பு, வாழ்வாதாரம், பெண்கள் தொடர்பான திட்டங்கள் மற்றும் திட்டங்களில் 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் நல்ல ஆவணங்கள் மற்றும் அறிக்கையிடல் திறன், உயர் கணினி கல்வியறிவு, தரவு பகுப்பாய்வு திறன் மற்றும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் சரளமாக நல்ல தொடர்பு திறன் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.

குறிப்பு :

இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், நிறுவனத்தின் தேவைகளைப் பொறுத்து, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட திட்டங்கள் செயல்பாடுகளில் பணியாற்றத் தயாராக இருக்க வேண்டும். எந்தவொரு காரணத்தையும் குறிப்பிடாமல் எந்தவொரு, அனைத்து விண்ணப்பங்களையும் ஏற்க அல்லது நிராகரிக்க EDII க்கு உரிமை உள்ளது.

விண்ணப்பிக்கும் மின்னஞ்சல் :

உங்களின் அனுபவம், தற்போதைய நிறுவனத்தின் பெயர், பதவி, பெறப்பட்ட சம்பளம் மற்றும் எதிர்பார்க்கப்படும் சம்பளம் ஆகியவற்றைக் குறிக்கும் திட்ட அலுவலருக்கான விண்ணப்பம் – மதுரை’ என்ற தலைப்பில் உங்கள் விண்ணப்பத்தை hrsro@ediindia.org என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

மேலும், இந்த பணியை பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ இணைய தளமான www.ediindia.org க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

Published by
கெளதம்

Recent Posts

இங்க நான் தான் கிங்.! எலான் மஸ்க் முதலிடம்! டாப் 5 உலக பணக்காரர் லிஸ்ட் இதோ..

ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…

11 minutes ago

”சேட்டன் வந்நல்லே… சேட்டை செய்ய வந்நல்லே” மீண்டும் கேப்டனாக களமிறங்கும் சஞ்சு சாம்சன்.!

பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…

53 minutes ago

“வக்பு சொத்துகளை மத்திய அரசு அபகரிக்க நினைக்கிறது!” ஆ.ராசா கடும் தாக்கு!

டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…

1 hour ago

வக்பு வாரிய திருத்த சட்டம் : பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இன்று வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…

2 hours ago

“டெல்லி நாடாளுமன்றமே வக்பு சொத்தா மாறியிருக்கும்” மத்திய அமைச்சர் பரபரப்பு பேச்சு!

டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…

2 hours ago

மும்பை அணியிலிருந்து விலகும் ஜெய்ஸ்வால்.! கோவா அணியில் கேப்டன் பதவி?

மும்பை: உள்ளூர் போட்டிகளில், அடுத்த சீசனில் இருந்து கோவா அணிக்கு விளையாட, மும்பை கிரிக்கெட் வாரியத்திடம் NOC சான்றிதழ் கேட்டிருக்கிறார்…

2 hours ago