மத்திய அரசில் வேலை.. நாளை தான் கடைசி.! சம்பளம் ரூ. 44,000.. உடனே விண்ணப்பியுங்கள்.!

மத்திய அரசு வேலை 2024 : மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்தியாவின் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் (EDII) மதுரை மாவட்டத்தில் காலியாக உள்ள திட்ட அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.
ஒப்பந்த அடிப்படையில் வெளியாகியுள்ள திட்ட அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பதாரர்கள் நாளை (ஜூலை 10) மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதனால், மதுரையில் வேலை தேடிக்கொண்டிருக்கும் இந்த பணிக்கு தகுதியுடைய நபர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
முக்கிய நாட்கள்
விண்ணப்பத்திற்கான தொடக்க தேதி | 04.07.2024 |
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி | 10-07-2024 |
பணியின் விபரம்
திட்ட அலுவலர் ( Project Officer )
சம்பளம்
திட்ட அலுவலர் பணிக்கு தகுதியானவருக்கு மாத சம்பளமாகரூ.44,000 வழங்கப்படும்.
கல்வி தகுதி மற்றும் அனுபவம்:
- கிராமப்புற மேலாண்மை, சமூகப்பணி, பொருளியல், எம்பிஏ ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- சிறு தொழில், தொழில் முனைவோர் மேம்பாடு, சுயவேலைவாய்ப்பு, வாழ்வாதாரம், பெண்கள் தொடர்பான திட்டங்கள் மற்றும் திட்டங்களில் 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் நல்ல ஆவணங்கள் மற்றும் அறிக்கையிடல் திறன், உயர் கணினி கல்வியறிவு, தரவு பகுப்பாய்வு திறன் மற்றும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் சரளமாக நல்ல தொடர்பு திறன் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.
குறிப்பு :
இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், நிறுவனத்தின் தேவைகளைப் பொறுத்து, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட திட்டங்கள் செயல்பாடுகளில் பணியாற்றத் தயாராக இருக்க வேண்டும். எந்தவொரு காரணத்தையும் குறிப்பிடாமல் எந்தவொரு, அனைத்து விண்ணப்பங்களையும் ஏற்க அல்லது நிராகரிக்க EDII க்கு உரிமை உள்ளது.
விண்ணப்பிக்கும் மின்னஞ்சல் :
உங்களின் அனுபவம், தற்போதைய நிறுவனத்தின் பெயர், பதவி, பெறப்பட்ட சம்பளம் மற்றும் எதிர்பார்க்கப்படும் சம்பளம் ஆகியவற்றைக் குறிக்கும் திட்ட அலுவலருக்கான விண்ணப்பம் – மதுரை’ என்ற தலைப்பில் உங்கள் விண்ணப்பத்தை [email protected] என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
மேலும், இந்த பணியை பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ இணைய தளமான www.ediindia.org க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.