Central Bank: மத்திய பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, அப்ரண்டிஸ் வேலைக்கான 3000 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கியாகும்.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து நிபந்தனைகளையும் படித்துவிட்டு வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான Central Bank of India விண்ணப்பிக்கவும். மேலே காலியிடங்களின் எண்ணிக்கை தற்காலிகமானது மற்றும் வங்கியின் உண்மையான தேவைக்கு ஏற்ப மாறுபடலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான விண்ணப்பதாரர்கள் வங்கியின் விருப்பப்படி, அந்தந்த மாநிலங்களில் உள்ள கிளைகள் மற்றும் அலுவலகங்களில் இருக்கும் பணிகளில் சேர்க்கப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி 21-02-2024 அன்று தொடஙகியது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மற்றும் கட்டணம் செலுத்துதல் 27-03-2024 அன்று முடிவடைகிறது. இதனை தொடர்ந்து 31-03-2024 அன்று தேர்வு நடைபெறுகிறது.
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.800 எனவும், SC,ST,EWS பெண் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.600 மற்றும் PWD விண்ணப்பதாரர்களுக்கு ரூ.400 என்றும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைன் பேமெண்ட்
விண்ணப்பதாரர்கள் கட்-ஆஃப் தேதியின்படி 01.04.1996 முதல் 31.03.2004 வரை பிறந்திருக்க வேண்டும்.
ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
கிராமப்புற, அரை நகர்ப்புற கிளைகள், நகர்ப்புற கிளைகள், மெட்ரோ கிளைகளில் ரூ.15,000 வழங்கப்படும்.
வங்கியிடமிருந்து ஆன்லைன் மூலம் தொழிற்பயிற்சிக்கான வாய்ப்பைப் பெறும் விண்ணப்பதாரர்கள் அதை குறிப்பிட்ட நேரம் மற்றும் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். தற்காலிகமாக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…
சென்னை : இன்று (ஜனவரி 18) சனிக்கிழமை தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில்…
சென்னை : தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட 8 இடங்களில் ஒரே நாளில் செயின் பறிப்பு…
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …