டிகிரி முடித்திருந்தால் சென்ட்ரல் பேங்க் வேலை.! அதுவும் தமிழ்நாட்டில்…உடனே விண்ணப்பிக்கவும்.!
Central Bank: மத்திய பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, அப்ரண்டிஸ் வேலைக்கான 3000 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கியாகும்.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து நிபந்தனைகளையும் படித்துவிட்டு வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான Central Bank of India விண்ணப்பிக்கவும். மேலே காலியிடங்களின் எண்ணிக்கை தற்காலிகமானது மற்றும் வங்கியின் உண்மையான தேவைக்கு ஏற்ப மாறுபடலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான விண்ணப்பதாரர்கள் வங்கியின் விருப்பப்படி, அந்தந்த மாநிலங்களில் உள்ள கிளைகள் மற்றும் அலுவலகங்களில் இருக்கும் பணிகளில் சேர்க்கப்படுவார்கள்.
READ MORE – B.Com, CA முடித்திருந்தால் அனல் மின் நிலையத்தில் வேலை…35 ஆயிரத்திற்கும் மேல் சம்பளம்.!
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி 21-02-2024 அன்று தொடஙகியது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மற்றும் கட்டணம் செலுத்துதல் 27-03-2024 அன்று முடிவடைகிறது. இதனை தொடர்ந்து 31-03-2024 அன்று தேர்வு நடைபெறுகிறது.
விண்ணப்பக் கட்டணம்
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.800 எனவும், SC,ST,EWS பெண் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.600 மற்றும் PWD விண்ணப்பதாரர்களுக்கு ரூ.400 என்றும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கட்டண முறை
ஆன்லைன் பேமெண்ட்
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் கட்-ஆஃப் தேதியின்படி 01.04.1996 முதல் 31.03.2004 வரை பிறந்திருக்க வேண்டும்.
கல்வி தகுதி
ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
உதவித்தொகை
கிராமப்புற, அரை நகர்ப்புற கிளைகள், நகர்ப்புற கிளைகள், மெட்ரோ கிளைகளில் ரூ.15,000 வழங்கப்படும்.
READ MORE – B.Sc முடித்திருந்தால் போதும் தோட்டக்கலை அதிகாரி வேலை.! உடனே விண்ணப்பியுங்கள்…
மாநிலம் யூனியன் பிரதேசங்கள் வாரியான காலியிடங்கள் லிஸ்ட்:
- மகாராஷ்டிரா – 320
- உத்தரப்பிரதேசம் – 305
- மத்திய பிரதேசம் – 300
- குஜராத் – 270
- பீகார் – 210
- ஆந்திரப் பிரதேசம் – 100
- ராஜஸ்தான்- 105
- மேற்கு வங்காளம் – 194
- தமிழ்நாடு – 142
- கர்நாடகா – 110
- பஞ்சாப் – 115
- தெலுங்கானா – 96
- ஹரியானா – 95
- டெல்லி – 90
- ஒடிசா- 80
- கேரளா – 87
- சத்தீஸ்கர் – 76
- அசாம் – 70
- ஜார்கண்ட் – 60
- ஹிமாச்சல பிரதேசம் – 26
- சண்டிகர் – 11
- தாத்ரா மற்றும் நகர் ஹவேலி – 03
- கோவா – 30
- உத்தரகாண்ட்- 30
- சிக்கிம் – 20
- அருணாச்சல பிரதேசம் -10
- ஜம்மு காஷ்மீர் – 08
- மணிப்பூர் – 08
- நாகாலாந்து – 08
- திரிபுரா – 07
- மேகாலயா – 05
- மிசோரம் – 03
- புதுச்சேரி – 03
- லடாக் – 02
- அந்தமான் நிக்கோபார் தீவுகள் – 1
READ MORE – CBHFL ஆட்சேர்ப்பு 2024: தலைமை அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்கவும்.!
வங்கியிடமிருந்து ஆன்லைன் மூலம் தொழிற்பயிற்சிக்கான வாய்ப்பைப் பெறும் விண்ணப்பதாரர்கள் அதை குறிப்பிட்ட நேரம் மற்றும் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். தற்காலிகமாக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.