அறிவியல் துறைகளில் BSc முடித்தவரா? அப்போ ரூ.25,000 சம்பளத்தில் இந்த வேலை உங்களுக்கு தான் ..!
கோவை : தமிழ்நாடு வனத்துறையானது கோவையில் பல்வேறு காலியிடங்களை நிரப்ப உள்ளது . தற்போது தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது .தமிழ்நாடு அரசில் வேலை தேடும் விண்ணப்பதாரர்கள் கீழே வரும் இந்த வேலைதொடர்பான விவரத்தை படித்துக்கொண்டு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
காலியிடங்கள் விவரம்
பதவியின் பெயர் |
காலியிடங்கள் எண்ணிக்கை
|
தொழில்நுட்ப உதவியாளர் | பல்வேறு |
தேவையான கல்வி தகுதி
- விண்ணப்பதாரர்கள் கணினி/ IT பின்னணி அறிவுடன் அறிவியல் துறைகளில் B.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும். அப்படி இருந்தால் நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.
வயது வரம்பு
- இந்த பணியில் வேளைக்கு சேர வயது வரம்பு பற்றி எதுவும் கொடுக்கப்படவில்லை என்ற காரணத்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள என்னை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளுங்கள்.
சம்பளம் எவ்வளவு?
- இந்த பணியில் வேலைக்கு சேர விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்களில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ.25,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
- இந்த பணியில் வேலைக்கு சேர விருப்பம் இருந்தது என்றால் நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.forests.tn.gov.in இணையதளத்திற்கு செல்லவேண்டும்.
- அதில் இந்த வேலை தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள விளம்பரத்தை க்ளிக் செய்யவேண்டும்.
- பின் இந்த வேலைக்கான விண்ணப்ப படிவத்தை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
- விண்ணப்ப படிவத்தில் சரியான விவரங்களை நிரப்ப வேண்டும்.
- நிரப்பிய பிறகு நீங்கள் விண்ணப்பம் செய்த படிவம் சரியாக இருக்கிறதா என்பதை சரிபார்த்து கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புங்கள்.
அனுப்பவேண்டிய முகவரி
வனச்சரக அலுவலகம், காரமடை வனச்சரகம், காரமடை – 641104
தேர்வு செய்யப்படும் முறை
- நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படலாம்.
முக்கிய நாட்கள்
விண்ணப்பம் தொடங்கிய தேதி | 11.07.2024 |
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி | 27.08.2024 |
முக்கிய விவரம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | https://www.forests.tn.gov.in/notifications |
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி | க்ளிக் |