பாரத் பெட்ரோலியத்தில் 25,000 சம்பளத்துடன் அப்ரன்டீஸ் பயிற்சி.! டிப்ளமோ, பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்…
பாரத் பெட்ரோலியத்தில் 25,000 சம்பளத்துடன் அப்ரன்டீஸ் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிப்ளமோ, பொறியியல் படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் கீழ் செயல்படும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் அப்ரேன்டீஸ் பயிற்சி பணிகளுக்கு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிப்பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க டிப்ளமோ, இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க கடந்த 10-ஜூலை-2023 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. கடைசி தேதியாக செப்டம்பர் 4ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரம் இதோ..
பணியின் விவரங்கள் மற்றும் காலியிடங்கள் :
- பொறியியல் பட்டதாரி அப்ரேன்டீஸ் – 77 காலிப்பணியிடங்கள்.
(கெமிக்கல், சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், தீ தடுப்பு பிரிவு என பல்வேறு பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் உள்ளன.)
- டிப்ளமோ பட்டதாரி அப்ரேன்டீஸ் – 50 காலிப்பணியிடங்கள்.
(கெமிக்கல், சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் என பல்வேறு பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் உள்ளன.)
- அலுவலக அப்ரண்டீஸ் – 11 காலிப்பணியிடங்கள்.
கல்வி தகுதி :
- பொறியியல் பட்டதாரி அப்ரேன்டீஸ் – குறிப்பிட்ட பிரிவுகளில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- டிப்ளமோ பட்டதாரி அப்ரேன்டீஸ் – குறிப்பிட்ட பிரிவுகளில் டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- அலுவலக அப்ரண்டீஸ் – B.Com , B.Sc (Chemistry).
(2019,2020, 2021, 2022, 2023 கல்வியாண்டில் படித்து முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.)
சம்பளம் விவரம் (மாதம் அடிப்படையில்):
- பொறியியல் பட்டதாரி அப்ரேன்டீஸ் – ரூ.25,000/-
- டிப்ளமோ பட்டதாரி அப்ரேன்டீஸ் – ரூ.18,000/-
- அலுவலக அப்ரண்டீஸ் – ரூ.18,000/-
கால வரம்பு – ஒரு வருடம்.
வயது வரம்பு :
- 18 வயது முதல் 27 வயது வரை.
- அரசு இடஒதுக்கீட்டின் படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
- மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பம் தொடங்கிய தேதி – 10 ஜூன் 2023.
விண்ணப்பிக்க கடைசி தேதி – 04 செப்டம்பர் 2023.
விண்ணப்பிக்கும் முறை :
- மத்திய அரசின் அப்ரன்டீஸ் பயிற்சிக்கான அதிகாரபூர்வ தளமான portal.mhrdnats.gov.inக்கு செல்ல வேண்டும்.
- அதனை தொடர்ந்து அந்த பக்கத்தில் பெயர், கடவுச்சொல் கொடுத்து உள்ளீடு செய்து உள்ளே செல்ல வேண்டும்.
- அதில் பாரத் பெட்ரோலியம் குறித்த அப்ரன்டீஸ் பயிற்சிகான லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
- அதன் பிறகு குறிப்பிடப்பட்டுள்ள தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்து, பதிவேற்ற வேண்டும்.
- அதில் மதிப்பெண் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு பின்னர் பணியமர்த்தப்படுவர்.