உடனே முந்துங்கள்… பேங்க் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு.. டிகிரி முடித்திருந்தால் போதும்!
BOI Recruitment 2024: பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பேங்க் ஆப் இந்தியாவில் (BOI) காலியாக உள்ள 143 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ரெகுலர் மற்றும் காண்ட்ராக்ட் அடிப்படையிலான அதிகாரிகள் பணிகள் நிரப்பட உள்ளது.
எனவே ஆர்வம் மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பம் கடந்த மாதம் 27ம் தேதி முதல் பெறப்பட்டு வரும் நிலையில், அடுத்த மாதம் 10ம் தேதி ஆன்லைனில் விண்ணப்பதற்கான கடைசி தேதியாகும்.
காலிப்பணியிட விவரங்கள்:
கிரீடிட் அதிகாரிகள், பொருளாதார நிபுணர், தொழில்நுட்ப ஆய்வாளர், சட்ட அதிகாரி, தலைமை பண மேலாளர், தரவு விஞ்ஞானி, தரவுத்தள நிர்வாகி, தரவுத் தர உருவாக்குநர், தரவு ஆளுமை நிபுணர், இயங்குதளப் பொறியியல் நிபுணர், லினக்ஸ் நிர்வாகி, ஆரக்கிள் ஸ்டேட் அட்மினிஸ்டிக், புள்ளியியல் நிபுணர், மூத்த மேலாளர் -ஐடி, தரவு ஆய்வாளர் உள்ளிட்ட 33 பதவிகளில் 143 பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஏற்றவாறு கல்வித்தகுதி கொடுக்கப்பட்டுள்ளது. அதில், குறிப்பாக பிஇ. பி டெக், சிஏ, எம்பிஏ, பிஎஸ்சி, எம்சிஏ, பிஜியில் (பொருளாதாரம்/ பொருளாதார அளவீடு) மற்றும் கம்ப்யூட்டர் சைன்ஸ் போன்றவைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
பொது மற்றும் பிற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.850 ஆகவும், SC/ST/PWD விண்ணப்பதாரர்களுக்கு ரூ.175 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தொகையை ஆன்லைன் வாயிலாக செலுத்தலாம். மேலும், இந்த பணியிடங்களுக்குக்கான ஆன்லைன் தேர்வுக்கான தேதி தனித்தனியாகஅறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு https://ibpsonline.ibps.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பக்கலாம். மேலும் இந்த பணியிடங்களுக்கான சம்பளம் மற்றும் மற்ற விவரங்களை https://bankofindia.co.in/documents இதனை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.