இளங்கலை பட்டம் போதும் .. விண்ணப்பியுங்கள் ! IBPS-யில் அசத்தல் வேலைவாய்ப்பு ..!

IBPS Job

IBPS : வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் சார்பாக (IBPS) இந்த ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. மேலும், வங்கிகளில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதால் அதனை நிரப்புவதற்கான தேடலில் இந்த வேலை வாய்ப்பினை வழங்கியுள்ளனர்.

  • இந்த பணிகளுக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு என முழு விவரங்கள் குறித்த தகவலைகள் கீழ கொடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய தேதி :

விண்ணப்ப தொடக்க தேதி 01-08-2024
விண்ணப்பிக்க கடைசி தேதி 21-08-2024

காலியிட விவரங்கள் :

  • தகவல் தொழில்நுட்ப அதிகாரி (Scale-I) , வேளாண் களஅலுவலர் (Scale I), ராஜ்பாஷா அதிகாரி (Scale I), சட்ட அதிகாரி (Scale I), HR/பணியாளர் அதிகாரி (Scale I), சந்தைப்படுத்தல் அதிகாரி (Scale I), அதிகாரிகள் (Officers), மேலாண்மை பயிற்சியாளர்கள் (Trainee).

கல்வி தகுதி :

  • இந்த பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட ஏதேனும் துறையில் இளங்கலை பட்டம் / முதுகலை பட்டம் / LLB / பொறியியல் / தொழில்நுட்ப பட்டம் கணினி அறிவியல் / கணினி பயன்பாடுகள் /தகவல் தொழில்நுட்பம் / மின்னணுவியல் / மின்னணுவியல் & தொலைத்தொடர்பு / மின்னணுவியல் & தகவல் தொடர்பு / மின்னணுவியல் ) வேளாண்மை / மீன்வள அறிவியல் / வனவியல் / வனவியல் / வேளாண் உயிரி தொழில்நுட்பம் / பி.டெக், உயிரி தொழில்நுட்பவியல்/ உணவு அறிவியல் / விவசாய வணிக மேலாண்மை / உணவு தொழில்நுட்பம் / பால் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • நிறுவனத்தின் வரையறுக்கப்பட்ட விதிகள் மற்றும் விண்ணப்பதாரர்களின் தகுதி, விருப்பம் போன்றவற்றின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு :

  • இந்த பணிகளுக்கான குறைந்த பட்ச வயது வரம்பு – 20 ஆண்டுகளாக இருக்க வேண்டும்.
  • அதிகபட்ச வயது வரம்பு – 30 ஆண்டுகள்

வயது தளர்வு :

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PWBD – 10 ஆண்டுகள்
  • Ex-Servicemen – 5 ஆண்டுகள்
  • 1984 கலவரத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் – 5 ஆண்டுகள்

குறிப்பு :- அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

தேர்ந்தெடுக்கும் முறை :

  • ஆன்லைன் மெயின்ஸ் தேர்வு (Mains Exam), ஷார்ட்லிஸ்ட் மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் :

  • SC / ST / PwBD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணமாக – ரூ. 175/- (GST உட்பட)
  • மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – ரூ.850 /- (GST உட்பட)
  • IBPS-யில் அறிவிக்கப்பட்ட இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
  • அதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெரிந்து கொள்வதற்கு இந்த அதிகாரப்பூர்வ இணையத்தை பார்வையிட்டு IBPS தெரிந்து கொள்ளலாம்.
  • மேலும், இந்த அறிவிப்பை குறித்தும் மற்ற வேலை விவரங்கள் குறித்தும் தெரிந்து கொள்வதற்கு இங்கு கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
  • மேலும், இந்த பதவிக்கான முழு விவரங்களையும் தெரிந்து கொள்வதற்கும் மற்றும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்வதற்கும் PDF– ஐ க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பித்து கொள்ளலாம்.
  • விண்ணப்பிக்கும் போது தகுந்த ஆவணங்களை இணைத்து, விண்ணப்பக்கட்டணம் செலுத்தி கடைசி தேதியான 21-08-2024 -க்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today live news
bumrah MI
Sardar2
Nitish Kumar woman at event sparks row
tamilisai soundararajan about tvk vijay
virender sehwag ms dhoni
iran trump