எம்பிபிஎஸ் முடித்தவரா நீங்க..? மாதம் ரூ.93,000 சம்பளத்தில் கெயில் நிறுவனத்தில் வேலை..! தவற விடாதீங்க..
கெயில் நிறுவனம் (GAIL) முழுநேர தொழிற்சாலை மருத்துவ அலுவலர் பதவிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனம் (GAIL) புது டெல்லியைத் தலைமையகமாகக் கொண்டு இயற்கை எரிவளியை முறைப்படுத்தி பரவலாக வழங்கும் மிகப்பெரிய அரசுத்துறை நிறுவனமாகும். இந்நிறுவனம் இயற்கை எரிவாயு மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகளின் அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைக்கிறது.
இந்த கெயில் நிறுவனம், எரிவாயு பதப்படுத்தும் பிரிவில் உள்ள தொழில்சார் சுகாதார மையத்திற்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள பதவியை நிரப்புவதற்கான தகுதியை பூர்த்தி செய்யும் மருத்துவத் துறையில் உறுதியான, துடிப்பான மற்றும் ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
பதவியின் விவரம்:
கெயில் நிறுவனம், தற்காலிக பணிக்கால அடிப்படையில் முழுநேர தொழிற்சாலை மருத்துவ அலுவலர் பதவிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் நிறுவனம் வெளியிட்டுள்ள Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்தவிட்டு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
முழுநேர தொழிற்சாலை மருத்துவ அலுவலர் பதவிக்கு விண்ணப்பிப்பவர் வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
தகுதி:
விண்ணப்பதாரர் எம்பிபிஎஸ் முடித்த இன்டர்ன்ஷிப் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும் மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட குறைந்தபட்சம் மூன்று மாத கால தொழில்துறை ஆரோக்கியத்தில் பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
- மருத்துவ அலுவலர் பதவிக்கு விண்ணப்பிப்பவர் முதலில் கெயில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு www.gailonline.com செல்லவேண்டும்.
- அதில் நீங்கள் விண்ணப்பிக்கும் பணிக்கான Online Application விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை சரியாக நிரப்ப வேண்டும்.
- அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி தேவையான சான்றுகளுடன் முறையாக கையொப்பமிடப்பட்டு நிரப்பப்பட வேண்டும்.
- பின், விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை, தொழிற்சாலை மருத்துவ அதிகாரி பதவிக்கான விண்ணப்பம்” என்ற தலைப்பில் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவேண்டும்.
தேர்வு முறை மற்றும் சம்பள விவரம்:
மருத்துவ அலுவலர் பதவிக்கான தேர்வு நேர்காணல் முறைப்படி நடைபெறும். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.93,000 சம்பளமாக வழங்கப்படும்.
கடைசி தேதி:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி தேதி ஜூன் 12 ஆகும். அதனை தாண்டி அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.