மாஸ்டர் டிகிரி முடித்தவர்களா நீங்கள்..? IIM திருச்சியில் 20 ஆயிரம் சம்பளத்தில் வேலை..மிஸ் பண்ணாதீங்க..!

iim trichy

இந்திய மேலாண்மைக் கழகம் திருச்சிராப்பள்ளி இந்திய அரசாங்கத்தால் பதினொன்றாம் ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட ஏழு இந்திய மேலாண்மை நிறுவனங்களுள் ஒன்று. இந்நிறுவனம் தகுதிவாய்ந்தவர்களுக்கு பெரிய நிறுவனங்களின் நூலகங்களில் பணிபுரிய உதவுவதற்கு பயிற்சி அளிக்க விரும்புகிறது. அந்த வகையில் தற்பொழுது, ஒரு வருட காலத்திற்கு நூலகப் பயிற்சியாளர் பணிக்கு ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

காலியிடங்கள்:

இந்திய மேலாண்மைக் கழகம் திருச்சிராப்பள்ளி நூலகப் பயிற்சியாளர் (Library Trainee) பணிக்கு காலியாக உள்ள 2 பணியிடங்களை நிரப்புகிறது.

வயது:

இதற்கு விண்ணப்பிப்பவர் 28 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு Notification அறிவிப்பை பார்க்கவும்.

தகுதி:

இந்தப் பதவிக்கான குறைந்தபட்ச தகுதிகள் நூலகம் மற்றும் தகவல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவு அவசியம் தேவை.

விண்ணப்பிக்கும் முறை:

  • இதற்கு ஆர்வமுள்ளவர்கள் www.iimtrichy.ac.in அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று, அங்கு இருக்கும் Application  விண்ணப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • அந்த படிவத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை தவறில்லாமல் நிரப்ப வேண்டும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்களின் நகலுடன் ஸ்பீட் போஸ்ட் மூலம் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

Chief Administrative Officer I/c.,
Indian Institute of Management Tiruchirappalli,
Pudukkottai Main Road, Chinna Sooriyur Village,
Tiruchirappalli, Tamilnadu – 620024

தேர்வு முறை:

  • எழுத்துத் தேர்வு மற்றும் கணினித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • பிறகு, தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு வர வேண்டும்.

சம்பளம்:

நூலகப் பயிற்சியாளர் பணிக்கு தெரிந்தெடுக்கப்படுபவருக்கு மாதம் ரூ.20,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

கடைசி தேதி:

இந்த பணிக்கான விண்ணப்படுவதை ஆகஸ்ட் 14ம் தேதிக்குள் மேற்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். அதன் பின் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

TVK -AmitShah
mutharasan cpi tvk vijay
Shoaib Akhtar
aadhav arjuna and vijay
annamalai about vijay
AFG vs ENG - Champions Trophy 2025
TVK Leader Vijay speech at TVK First Anniversary Function