60% மதிப்பெண் பெற்ற பட்டதாரியா நீங்கள்? எல்.ஐ.சியில் இந்த வேலை உங்களுக்கு தான்..!

LIC Job

எல்ஐசி : எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ், அவர்களது நிறுவனத்தில் பணிபுரிய இந்த ஆண்டிற்கான காலிப்பணியிடங்கள் ஆட்சேர்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (LIC HFL) அறிவிப்பின் படி 10 இளநிலை உதவியாளர் பதவிகளை நிரப்புவதற்காக தகுதியானவர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி இந்த பணிக்கான முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது, பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

முக்கிய தேதிகள் : 

விண்ணப்பிக்க தொடங்கிய தேதி 25-07-2024
விண்ணப்பிக்க கடைசி தேதி 14-08-2024

காலியிட விவரங்கள் :

  • இளநிலை உதவியாளர் (Junior Assistant) – 10 பணியிடங்கள்

சம்பளம் :

  • மேற்கண்ட பணிக்கு ரூ.32,000 முதல் ரூ.35,200 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

இடம் & வயது வரம்பு :

 

பணியமர்த்தப்படும் இடம் தமிழ்நாடு
வயது வரம்பு
குறைந்தபட்ச வயது வரம்பு 21 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு 28 ஆண்டுகள்

கல்வி தகுதி :

  • மேலே கொடுக்கப்பட்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 60% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு துறையில் பட்டதாரி (Graduate) பட்டம் கட்டயமாக பெற்றிருக்க வேண்டும்.
  • அத்துடன் விண்ணப்பிக்கும் நபர்கள் அடிப்படை கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.

தேர்தெடுக்கும் முறை :

  • ஆன்லைன் தேர்வு(Online Examination)
  • நேர்க்காணல் (Interview)
  • இறுதி தேர்வு (Final Selection)
  • மருத்துவத்தேர்வு (Medical Examination) போன்ற தேர்வு நடைமுறைகளின் அடிப்படையில் தகுதி மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

  • எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட இந்த இளநிலை உதவியாளர் (Junior Assistant) பணிக்கான தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.lichousing.com/ -ஐ கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
  • மேலும் இப்பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க https://ibpsonline.ibps.in/licjajul24/ இந்த கிளிக் செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
  • மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ PDF-ஐ பதிவிறக்கம் செய்வதற்கு, இந்த PDF-ஐ க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • குறிப்பு :- அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.800/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay
Heart Donation
gold price
KL Rahul - Virat Kohli
TikTok Ban in USA
Coimbatore Tidel Park