12ம் வகுப்பு முடிச்சுருக்கீங்களா..? கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு…!
கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார சங்கம் தற்போது வேலைவாய்ப்புக்கான Notification அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள நுண்கதிர் படபிடிப்பாளர் (Radiographer) பணியை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப உள்ளது. இதற்கு ஆர்வமுள்ளவர்கள் கீழே வரும் விவரங்களை படித்துவிட்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
காலியிடங்களின் எண்ணிக்கை:
இந்த நுண்கதிர் படபிடிப்பாளர் (Radiographer) பணிக்கு மொத்தமாக மூன்று இடங்கள் மட்டுமே காலியாக உள்ளது. எனவே, சீக்கிரமாக விண்ணப்பிக்குமாறு விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கல்வி தகுதி:
- 10ம் வகுப்பு தமிழை மொழிப்பாடமாக கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- 12ம் வகுப்பில் உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியியல் பாட பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- 1 வருட சான்றிதழ் படிப்பு (C.R.A – Certificate course in Radiology Assistant) அல்லது 2 வருட டிப்ளமோ படிப்பு (Diploma in Radiography) அல்லது 3 வருட இளங்கலை படிப்பு (B.Sc. Radiology and Imaging Technology)
வயது:
இந்த பணியில் சேரும் விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 50 வயது உடையவராக இருக்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
- இந்த பணியில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட இணையதளத்தில் krishnagiri.nic.in நுழைய வேண்டும்.
- அங்கு இருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்துவிட்டு, ஆன்லைன் விண்ணப்பப்படிவத்தை Application Form நிரப்ப வேண்டும்.
- தகவல்களை பூர்த்தி செய்த பின்னர், தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- அனைத்தையும் பூர்த்தி செய்த பிறகு, நிரப்பிய தகவல்கள் சரியாக உள்ளதா என்பதை பார்த்துவிட்டு பதிவு செய்ய வேண்டும்.
- இந்தப் பதவி முற்றிலும் தற்காலிகமானது எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
சம்பளம்:
நுண்கதிர் படபிடிப்பாளர் பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.10.000 சம்பளமாக வழங்கப்படும்.
கடைசி தேதி:
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ஜூலை 14ம் தேதி மாலை 6 மணிக்குள் ஆன்லைனில் விண்ணப்பித்திருக்க வேண்டும். அதன்பின், வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.