டிகிரி முடிச்சா போதும் … இந்தியன் வங்கியில் அப்ரண்டிஸ் வேலை ரெடி ..!

Published by
அகில் R

இந்தியன் வங்கி ஆட்சேர்ப்பு : இந்தியன் வங்கி 2024 முதல் 2025 ஆண்டிற்க்கான பயிற்சியாளர் பணிக்கான அறிவிப்பை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி இந்தியா முழுவதும் மொத்தமாக 1500 காலியிடங்கள் உள்ளன. அதில் தமிழகத்தில் மட்டும் 277 காலியிடங்களை அறிவித்துள்ளது. தற்போது, இந்த பயிற்சி பணிக்கான முழு விவரங்களையும் பார்க்கலாம்.

முக்கிய நாட்கள் :

விண்ணப்பிப்பதற்கான தொடங்கிய தேதி 10-07-2024
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 31-07-2024

 

காலியிட விவரங்கள் :

  • இந்த பயிற்சி பணிக்காக இந்தியா முழுவதும் இந்தியன் வங்கி அறிவித்துள்ள எண்ணிக்கை மொத்தம் 1500 ஆகும்.
  • ஆனால், தமிழகத்தில் மட்டும் 277 காலியிடங்களை அறிவித்துள்ளது.
  • விருப்பமும் தகுதியும் உடையவர்கள், விண்ணப்பித்து காலியிடங்களை நிரப்பி பயன்பெற்று கொள்ளலாம்.

கல்வி தகுதி & வயது வரம்பு  :

கல்வி தகுதி கட்டாயமாக ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
குறைந்தபட்சம் 20 வயது
அதிகபட்சம் 28 வயது

 

சம்பள விவரம் :

  • (மெட்ரோ) நகர்ப்புற கிளைகளில் பணிபுரியும் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.15,000/- உதவித்தொகை வழங்குவார்கள்.
  • (கிராமப்புற) அரை நகர்ப்புற கிளைகளில் பணிபுரியும் பயிற்சியாளர்களுக்கு மாதத்திற்கு ரூ.12,000/- உதவித்தொகை வழங்குவார்கள்.

தேர்வு செய்யும் முறை :

  • ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலமாகவும் மற்றும் உள்ளூர் மொழித் திறன் எப்படி இருக்கிறது என்ற அடிப்படையிலும் மற்றும் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம் :

விண்ணப்பக்கட்டணம்
General/OBC/EWS ரூ.500/-
SC/ST/PwBD
கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை : 

  • இந்த பயிற்சி பணிக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் www.indianbank.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில் விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பித்து கொள்ளலாம்.
  • மேலும், இந்த பயிற்சி பணிக்கான மேற்கொண்டு தகவலை தெரிந்து கொள்ள இந்த PDF-ஐ கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • அதில் விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து கொள்ள வேண்டும்.
  • மேலும், படிவத்தை நிரப்பியுடன் கட்டண தொகை உண்டு என்றால் கட்டணம் கட்டி கொள்ளவும்.
  • விண்ணப்ப படிவத்தை கடைசி தேதி முன்பு சமர்ப்பிக்க வேண்டும்.
Published by
அகில் R

Recent Posts

சென்னை, காஞ்சிபுரம் 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

3 hours ago

தமிழகத்தில் வியாழன் கிழமை (26/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…

3 hours ago

வந்தாச்சு விடாமுயற்சி அப்டேட்! முதல் பாடல் இந்த தேதியில் தான் வெளியீடு!

சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…

3 hours ago

நான் தான் நம்பர் 1! டெஸ்ட் தரவரிசையில் அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…

4 hours ago

பாலியல் வன்கொடுமை – த.வெ.க தலைவர் விஜய் கடும் கண்டனம்!

சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…

4 hours ago

பாலியல் வன்கொடுமை- யார் இந்த ஞானசேகரன்? விசாரணையில் வந்த பகீர் தகவல்!

சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…

5 hours ago