டிகிரி முடிச்சா போதும் … இந்தியன் வங்கியில் அப்ரண்டிஸ் வேலை ரெடி ..!
இந்தியன் வங்கி ஆட்சேர்ப்பு : இந்தியன் வங்கி 2024 முதல் 2025 ஆண்டிற்க்கான பயிற்சியாளர் பணிக்கான அறிவிப்பை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி இந்தியா முழுவதும் மொத்தமாக 1500 காலியிடங்கள் உள்ளன. அதில் தமிழகத்தில் மட்டும் 277 காலியிடங்களை அறிவித்துள்ளது. தற்போது, இந்த பயிற்சி பணிக்கான முழு விவரங்களையும் பார்க்கலாம்.
முக்கிய நாட்கள் :
விண்ணப்பிப்பதற்கான தொடங்கிய தேதி | 10-07-2024 |
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி | 31-07-2024 |
காலியிட விவரங்கள் :
- இந்த பயிற்சி பணிக்காக இந்தியா முழுவதும் இந்தியன் வங்கி அறிவித்துள்ள எண்ணிக்கை மொத்தம் 1500 ஆகும்.
- ஆனால், தமிழகத்தில் மட்டும் 277 காலியிடங்களை அறிவித்துள்ளது.
- விருப்பமும் தகுதியும் உடையவர்கள், விண்ணப்பித்து காலியிடங்களை நிரப்பி பயன்பெற்று கொள்ளலாம்.
கல்வி தகுதி & வயது வரம்பு :
கல்வி தகுதி | கட்டாயமாக ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். |
வயது வரம்பு
|
குறைந்தபட்சம் 20 வயது |
அதிகபட்சம் 28 வயது |
சம்பள விவரம் :
- (மெட்ரோ) நகர்ப்புற கிளைகளில் பணிபுரியும் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.15,000/- உதவித்தொகை வழங்குவார்கள்.
- (கிராமப்புற) அரை நகர்ப்புற கிளைகளில் பணிபுரியும் பயிற்சியாளர்களுக்கு மாதத்திற்கு ரூ.12,000/- உதவித்தொகை வழங்குவார்கள்.
தேர்வு செய்யும் முறை :
- ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலமாகவும் மற்றும் உள்ளூர் மொழித் திறன் எப்படி இருக்கிறது என்ற அடிப்படையிலும் மற்றும் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம்
|
General/OBC/EWS | ரூ.500/- |
SC/ST/PwBD |
கட்டணம் இல்லை
|
விண்ணப்பிக்கும் முறை :
- இந்த பயிற்சி பணிக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் www.indianbank.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில் விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பித்து கொள்ளலாம்.
- மேலும், இந்த பயிற்சி பணிக்கான மேற்கொண்டு தகவலை தெரிந்து கொள்ள இந்த PDF-ஐ கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- அதில் விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து கொள்ள வேண்டும்.
- மேலும், படிவத்தை நிரப்பியுடன் கட்டண தொகை உண்டு என்றால் கட்டணம் கட்டி கொள்ளவும்.
- விண்ணப்ப படிவத்தை கடைசி தேதி முன்பு சமர்ப்பிக்க வேண்டும்.