10ம் வகுப்பு போதும்.. மத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு.!
மத்திய ரயில்வே ஆட்சேர்ப்பு 2024 : இந்திய ரயில்வேயின் (மத்திய) பிரிவு 2,424 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்கீழ், பல்வேறு பணிகளுக்கு அப்ரென்டிஸ் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பிட்டர், வெல்டர், கார்பெண்டர், பெயிண்டர், டெய்லர், எலக்ட்ரீசியன், மெஷினிஸ்ட் உள்ளிட்ட காலி இடங்களுக்கு அப்ரண்டிஸ் முறையில் ஆட்களை மத்திய ரயில்வே தேர்வு செய்கிறது. இதற்கு விண்ணப்பிக்கும் விரும்பும் விண்ணப்பதாரர்கள் ரயில்வே ஆட்சேர்ப்பு (ஆர்ஆர்சி) அதிகாரப்பூர்வ இணையதளமான rrccr.com இணையதளத்தில் ஆகஸ்ட் 15வரை விண்ணப்பிக்கலாம்.
முக்கிய தேதிகள் :
மும்பை | |
வண்டி & வேகன் (Coaching) | 258 |
கல்யாண் டீசல் ஷெட் | 50 |
குர்லா டீசல் ஷெட் | 60 |
Sr.DEE (TRS) கல்யாண் | 124 |
Sr.DEE (TRS) குர்லா | 192 |
பரேல் பட்டறை | 303 |
மாட்டுங்கா பட்டறை | 547 |
S&T பட்டறை, பைகுல்லா | 60 |
புசாவல் | |
வண்டி & வேகன் டிப்போ | 122 |
எலக்ட்ரிக் லோகோ ஷெட், புசாவல் | 80 |
எலெக்ட்ரிக் லோகோமோட்டிவ் ஒர்க்ஷாப், புசாவல் | 118 |
மன்மத் பட்டறை | 51 |
TMW நாசிக் சாலை | 47 |
சோலாப்பூர | |
வண்டி & வேகன் டிப்போ | 31 |
குர்துவாடி பட்டறை | 121 |
நாக்பூர் | |
எலக்ட்ரிக் லோகோ ஷெட், அஜ்னி | 31 |
வண்டி & வேகன் டிப்போ | 121 |
மெல்ப்ல் அஜ்னி | 40 |
விண்ணப்பக் கட்டணம் :
- விண்ணப்பக் கட்டணம் : ரூ. 100/-
- SC, ST, PWD, பெண் விண்ணப்பதாரர்களுக்கு : கட்டணம் இல்லை
- பணம் செலுத்தும் முறை: ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும்
கல்வி தகுதி :
- 10 ஆம் வகுப்பு தேர்வில் அல்லது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
- குறைந்தபட்ச வயது வரம்பு : 15
- அதிகபட்ச வயது வரம்பு : 24
- விதிகளின்படி வயது தளர்வு பொருந்தும்.
விண்ணப்பிக்கும் முறை :
- விண்ணப்பதாரர்கள் www.rrccr.com என்ற இணையதளத்திற்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
- பிறகு அதில் இந்த வேலை தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள விவரத்தை க்ளிக் செய்யவேண்டும்.
- பின் தேவையான ஆவணங்களை வைத்து அதில் கேட்கப்பட்டு இருக்கும் கேள்விகளை வைத்து நிரப்பி விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
குறிப்பு:
- விவரங்கள் BIO-DATA போன்றவற்றை கவனமாக நிரப்ப வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் ஆதார் அட்டையை வைத்திருக்க வேண்டும்.
- பதிவு செய்யும் போது, விண்ணப்பதாரர்கள் 12 இலக்க ஆதார் அட்டையை நிரப்ப வேண்டும்
- ஜம்மு மற்றும் காஷ்மீர், மேகாலயா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களைத் தவிர அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வேட்பாளர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தும்.