இன்னும் மூன்றே நாட்கள் தான்…இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பியுங்கள்!
TRB, TN: ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TRB), . 2023-2024ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு இடைநிலை கிரேடு ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப நேரடி நியமனத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான அறிவிப்பு (09-02-2024) அன்று வெளியிடப்பட்டது. இந்த பணிக்கான விண்ணப்பிக்கும் தேதி 14-02-2024 அன்று தொடங்கியது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 15-03-2024 அன்று முடிவடைகிறது.
READ MORE – நீலகிரி ஒன் ஸ்டாப் சென்டரில் வேலை…சம்பளம் எவ்வளவு தெரியுமா.?
இந்த பணிக்கான தேர்வு 23-06-2024 அன்று நடைபெற உள்ளதால், இதற்கு விண்ணப்பிக்க இன்னும் மூன்றே நாட்கள் மட்டுமே உள்ளது. இதனால், ஆர்வம் மற்றும் தகுதியுடை விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பியுங்கள். இந்த விண்ணப்பங்கள் 15.03.2024 அன்று மாலை 5.00 மணி வரை மட்டுமே பெறப்படும். இந்நிலையில், விண்ணப்பதாரர்கள் அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://trb.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் விண்பிக்கலாம்.
READ MORE – தூத்துக்குடி சுகாதாரத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை.! ரூ.40,000 சம்பளம்.!
விண்ணப்பக் கட்டணம்
தகுதியுடை விண்ணப்பதாரர்களுக்கு: ரூ.600
SC |SCA | ST மற்றும் PWD விண்ணப்பதாரர்களுக்கு: ரூ.300
கட்டண முறை: நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு
READ MORE – Job Vacancy : வேலூர் CMC மருத்துவ அதிகாரி, லேப் டெக்னீசியன் வேலைக்கு ஆட்சேர்ப்பு ..!
இடைநிலை ஆசிரியர் நேரடி நியமன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில்தேர்ச்சி பெற்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
பணியின் விவரம் |
காலியிடங்கள் எண்ணிக்கை |
சம்பளம் | தகுதி | வயது |
இடைநிலை ஆசிரியர் | 1768 | ரூ.20600 முதல்ரூ.75900 வரை | D.El.Ed, D.Ed, B.El.Ed அல்லது பட்டம் முடித்திருக்க வேண்டும். TNTET உடன் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
53 – 58 |
குறிப்பு:
மேலே கொடுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தற்காலிகமானது. இந்த காலிப் பணியிடங்கள் பணிவாய்ப்பு மற்றும் பயன்பாட்டுத் துறைகளின் கோரிக்கையின் படி காலிப்பணியிடங்கள் சேர்க்கப்படும் அல்லது விலக்கப்படும் என தெரிவிப்பட்டுள்ளது.